இலண்டன் பிபிசி வானொலி முன்னாள் ஒலிபரப்பாளரும் சட்டத்தரணியுமாகிய விமல் சொக்கநாதன் அகால மரணத்தைத் தழுவினார் என்ற சோகமான செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்

உலகப் புகழ்பெற்ற இலண்டன் பிபிசி வானொலி முன்னாள் ஒலிபரப்பாளரும் உலகெங்கும் வெளிவரும்தமிழ்ப்பத்திரிகைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதிவந்தவரும் தொழில் ரீதியாக சட்டத்தரணியுமாகியவிமல் சொக்கநாதன் அவர்கள் அகால மரணத்தைத் தழுவினார் என்ற சோகமான செய்தியை அனைவரோடும்பகிர்ந்து கொள்கின்றோம்.

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து தனதுபுத்தகங்களின் வெளியீட்டு விழாக்களை வெற்றிகரமாக நடத்தியும் எதிர்வரும் ஒக்டோபர் 14ம் திகதிசனிக்கிழமை கனடாவிலும் தனது நூல்கள் சிலவற்றை வெளியிடும் முயற்சியில் இறங்கி அதற்கானஏற்பாடுகளை செய்வதில் கனடாவில் உள்ள பல நண்பர்கள் பலரோடு கலந்துரையாடல்களை நடத்தி வந்தநிலையில் எதிர்பாராத விதமாக நாம் நண்பர் விமல் சொக்கநாதன் அவர்களை இழக்க வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.

அவரது இழப்பு உலகெங்கும் வாழும் எம் போன்ற அவரது நண்பர்கள் உறவினர்கள். நேயர்கள். வாசகர்கள். அபிமானிகள். பத்திரிகையாளர்கள். எழுத்தாளர்கள். ஓலிபரப்பாளர்கள் என இலட்சக் கணக்கானவர்களின்இதயங்களை தாக்கியிருக்கும் என்பதையும் நாம் அறிவோம்.

அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் எமக்கு கிடைக்கும் பட்சத்தில் அனைவரும் அறியும்வகையில் நாம் பதிவு செய்வோம் என்பதையும் அறியத்தருகின்றோம்.

கனடா உதயன் ஆசிரிய பீடம்