இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனுக்கு கொரோனா

இங்கிலாந்து: பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால் வரும் ஜூலை 19-ம் தேதி முதல் ஊரடங்கை முழுவதுமாக நீக்கிவிட போரிஸ் ஜான்சன் அரசு முடிவெடுத்துள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோருக்கு வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இவர் கடந்த 10 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர் என்று கென்சிங்டன் அரண்மனை இன்று தகவல் வெளியிட்டுள்ளது.  இங்கிலாந்தின் டென்னிஸ் நட்சத்திர வீரர் டிம் ஹென்மேன் உடன் அமர்ந்து டென்னிஸ் போட்டியை கேட் மிடில்டன் கண்டுகளித்தார். இதுதவிர அருங்காட்சியகம், சென்டர் கோர்ட் கிச்சன் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் வருகை தந்தார். இதனால் அவருக்கு வைரஸ் தாக்கம் ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.