சூரி நாயகனாக நடிக்கும் ‘கருடன்’ திரைப்படத்தின் பதாகை வெளியீடு

இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம்கருடன்‘. இதில்நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கியவேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் . வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.*******


பிரதீப் . ராகவ் படத்தொகுப்பு பணிகளை கையாள, ஜி. துரைராஜ் கலை இயக்க பொறுப்பை ஏற்றிருக்கிறார்.‌  ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில்தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாகநடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூரி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றமும், வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய காணொளியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

சூரிசசிகுமார்உன்னி முகுந்தன்சமுத்திரக்கனி – R S. துரை செந்தில்குமார் என நட்சத்திர பட்டாளங்கள்ஒன்றிணைந்து, ‘கருடன்திரைப்படத்தை உருவாக்கி இருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.