அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர்கள் ஒரு கோடி நன்கொடை

அமரர் கல்கி எழுதியபொன்னியின் செல்வன்நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில்பொன்னியின் செல்வன்எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்டதிரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம்முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்திருக்கிறதுலைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு  கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் முன்னிலையில்அறக்கட்டளையின்  நிர்வாகத் தலைவர் சீதா ரவியிடம் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினர்.****

இந்த நன்கொடை அறக்கட்டளையின் மூலதன நிதியாதாரமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதுபொன்னியின் செல்வன்நாவலை எழுதிய அமரர் கல்கிக்கு நன்றி செலுத்தும் வகையில், அவரது குடும்பஉறுப்பினர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அறக்கட்டளைக்குபொன்னியின் செல்வன்படக்குழுவினர்ஒரு கோடி ரூபாயை மூலதன நிதி உதவியாக வழங்கி இருக்கிறார்கள். லைகா குழும தலைவர் சுபாஸ்கரன்மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் இந்த செயலுக்கு, திரை உலகினர் மட்டுமல்லாமல், அவரின் வாசகர்கள்அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.