“அச்சம் என்பது இல்லையே” முன்னோட்டம் வெளியீடு

*லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் வெளியீட்டில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின்மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையேபடத்தின் முன்னோட்டக் காட்சி தற்போது வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு முடிந்திருக்கிறது இந்த முன்னோட்டம். வெளியான 24 மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட  மில்லியன் பார்வைகளை நெருங்கி யூடியூப்டிரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறதுமிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லயே. படத்தின் உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் பெற்று உலகம் முழுவதும் வெளியிட உள்ளார். படத்தினை எம். ராஜசேகர் & எஸ்.சுவாதி தயாரித்துள்ளனர். இப்படத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன்ஷா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.************

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு, அனைத்துத் தரப்பிலான பார்வையாளர்களை யும்கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளது. மொழிகளைத் தாண்டி, அனைத்து தரப்பினருக்கும் போய் சேரும் வகையிலான கதையம்சத்தைக் கொண்டுள்ளதால், நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. படத்தின் ட்ரைய்லர், ஆடியோ மற்றும்உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புவெளியாகும்.

பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னைமற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன்இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பலபாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர் மற்றும் வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன்இணைந்து தயாரித்துள்ளனர்.

*தொழில்நுட்பக்குழு விவரம்:* இயக்கம்: விஜய்லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்: ஜி.கே.எம். தமிழ் குமரன்தயாரிப்பு: சுபாஸ்கரன், எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதிஇணைத்தயாரிப்பு: சூர்யா வம்சி பிரசாத் கோதாஜீவன் கோத்தாஇசை: ஜி.வி. பிரகாஷ் குமார்கதை & திரைக்கதை: .மகாதேவ்வசனம்: விஜய்ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்எடிட்டிங்:  அந்தோணிஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வாகலை இயக்குநர்: சரவணன் வசந்த்ஆடை வடிவமைப்பாளர்: ருச்சி முனோத்ஒப்பனை: பட்டணம் ரஷீத்நிர்வாகத் தயாரிப்பாளர்: வி கணேஷ்தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: கே மணி வர்மாநிர்வாகத் தயாரிப்பாளர்கள் (யுகே): சிவகுமார், சிவ சரவணன்தயாரிப்பு நிர்வாகிமனோஜ் குமார் கேஆடை வடிவமைப்பாளர்:  மொடப்பள்ளி ரமணாஒலி வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்VFX – D நோட்ஸ்டில்ஸ்: ஆர் எஸ் ராஜாPromotion & Strategies: ஷியாம் ஜாக்மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்விளம்பர வடிவமைப்பாளர்பிரதூல் என்.டி