ஊழலை ஒழிக்க வேகமெடுக்கும் “இந்தியன் 2” விமர்சனம்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சமுத்திரக்கனி, சித்தார்த், பிரியா பவானி சங்கர், தம்பி ராமைய்யா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “இந்தியன் 2”. முதல் பாகத்தில் தன் மகனை கொன்றுவிட்டு தப்பி சென்ற இந்தியன் தாத்தா கமல்ஹாசனை, கோடி கணக்கில் தலைவிரித்தாடும் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் இந்தியன் தாத்தா மீண்டும் வரவேண்டுமென்று தன் நண்பர்களுடன் கூடி முடிவு எடுக்கிறார் சித்தார்த். எங்கிருக்கிறார் என்று தெரியாமலிருக்கும் இந்தியன் தாத்தாவை எப்படி வரவழைக்கிறார் என்பதும், இந்தியாவுக்கு வந்த இந்தியன் தாத்தா கமல்ஹாசன் ஊழலை ஒழிக்க என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்பதுதான் “இந்தியன் 2” வின் கதை. முதல் பாகத்தில் ஊழல்வாதிகளை கத்தியால் கொலை செய்யும் தாத்தா, இரண்டாம் பாகத்து ஊழல்வாதிகளை வர்மக்கலையால் கொலை செய்யும் புதிய யுத்தியை கையாண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். கமல்ஹாசனின் உயிரோட்டமான நடிப்பு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. அபாரமான அரங்குகள் திகைப்பூட்டும் காட்சிகள் அனைத்தும் கைத்தட்ட வைக்கின்றன. உச்சபட்ச தொழில் நுட்பத்தோடு இந்தியன் மூன்றாம் பாகத்திற்கும் இழுத்து சென்றிருக்கிறார் இயக்கநர் ஷங்கர்.