‘பொன்னியின் செல்வனை’ திரைப்படத்தை உருவாக்க லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரனுடன் இயக்குநர் மணிரத்தினம் பேச்சு வார்த்தை நடத்தினார். படத்தின் பட்ஜெட் 800 கோடி ரூபாய் என்றும், இரண்டு பாகங்களாக உருவாக்கலாம் என்றும் மணிரத்னம் ஆலோசனை சொன்னபோது, சுபாஷ்கரன் ஏற்றுக்கொண்டு படத்தயாரிப்பில் முழு மனதுடன் ஈடுபட்டார். மணிரத்னம் என்ற படைப்பாளி- அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் நாவல்- இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் -ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்- எழுத்தாளர் ஜெயமோகன் என ஒவ்வொரு துறையில் இருந்தும் சிறந்த படைப்பாளிகளின் கூட்டணியுடன் உருவான இந்த ‘பொன்னியின் செல்வன்’ படைப்பிற்கு தங்களுடைய ஒத்துழைப்பை மனமுவந்து அளித்தார் தயாரிப்பாளர் சுபாஷ்கரன். இதனை தொடர்ந்து லைகா நிறுவனம் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து உருவாக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்திற்கான முன்னோட்ட காட்சி வெளியிட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.*******
இவ்விழாவில் பட குழுவினருடன் லைகா நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜி கே எம் தமிழ் குமரன் கலந்து கொண்டார். ‘பொன்னியின் செல்வன்’ டீசர், தமிழ் மண்ணின் அசலான வரலாற்றை டிஜிட்டலில் பதிவு செய்திருக்கும் பிரம்மாண்டமான காவியம் என இணையவாசிகளின் பாராட்டைப்பெற்றது. அத்துடன் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வியலை காட்சி வழியாக அடுத்த தலைமுறைக்கும் சென்றடைய செய்த பட குழுவினரை அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டையும், மகிழ்ச்சியையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.