வட்டார வழக்கு திரைப்படம் டிச.29ல் திரைக்கு வருகிறது

மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கண்ணுசாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடிப்பில் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம்வட்டார வழக்கு‘. இப்படத்தின் அறிமுக நிகழ்வில்  இயக்குநர் கண்ணுசாமி  ராமச்சந்திரன் பேசும்போது, “இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போகும்போது எல்லாம் எங்களை உற்சாகம் குறையாமல் படக்குழுவினர் பார்த்துக் கொண்டனர். இவர்கள் எண்பது சதவீதம் பேர் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்துள்ளனர். சிறு சிறு விஷயங்களுக்கு கூட எங்களை எதிர்பார்க்காமல் அவர்களது சொந்த காசை செலவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். கேபிள் சங்கர் சார், சித்ரா லட்சுமணன்சார் எனப் பலரும் எங்களுக்கு வழிகாட்டி, பொருளாதார உதவி வரை செய்தனர்.*******

பின்னணி இசையை நம்பிஇருக்கக்கூடிய படம் இது. இந்தக் கதைக்கு ராஜா சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். படத்தைப் பார்த்துவிட்டு அவர் சம்மதம் சொன்னார். ஒரு சின்ன படத்திற்கான அடிப்படைத் தேவைக்கானசெலவு மட்டும் தான் ராஜா சார் கேட்டிருந்தார். ஆனால், அவர் கேட்டதில் 60% தான் என்னால் கொடுக்கமுடிந்தது. 40% பணம் என்னிடம் இல்லை. அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாது இசையை செய்து தருவதாக சொன்னார். அவர் காலில் விழுந்து விட்டேன். 12 நாட்கள் ஒரு தியானம் போல, இதன் பின்னணி இசையைசெய்து கொடுத்தார். நல்ல படம் என்பதால், இதற்குப் பலரும் எந்தவிதமான எதிர்பார்பும் இல்லாமல் ஆதரவுகொடுத்தனர். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் சார் எப்பொழுதும் நல்ல படம்தான் எடுக்க வேண்டும்என்பதில் கவனமாக இருப்பார். பத்திரிக்கையாளர்களின் உதவியோடு அவரை அணுகினேன். அவருக்கும் படம்பிடித்து சம்மதம் சொன்னார். சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவிமர் அனைவருக்கும் நன்றி. பொருளாதாரத்தில் சில குறை நிறைகளோடு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அதை மன்னித்து உங்கள்ஆதரவைக் கொடுங்கள். 29 ஆம் தேதிவட்டார வழக்குவெளியாகிறது இந்த படத்திற்கு இரண்டுஎஜமானர்கள். ஒன்று பார்வையாளர்கள், இன்னொன்று ஊடகங்கள். நீங்கள் தரும் ஆதரவினால் தான்வட்டார்வழக்குமைலேஜ் ஏற்றி அடுத்தடுத்து நகரும்என்றார்.