இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் மீடியா அகாடமி துவக்க விழா

தமிழ் சினிமாவின் கலைப்பிதாமகன் எனக் கொண்டாடப்பட்ட இயக்குநர் மகேந்திரன் நினைவாக, திரைத்துறை மீது காதல் கொண்ட மாணவர்கள் பயன் பெறும் வகையில், இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம்  மீடியா அகாடமி துவக்கப்பட்டுள்ளது.  ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்து, திரைத்துறையில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த இயக்குநர் மகேந்திரன் நினைவாக, இந்த அகடாமி சார்பில், தமிழகத்தில் சினிமா ஆசை கொண்ட மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், மிகக்குறைந்த கட்டணத்தில்,  மாணவர்களுக்கு திரைத்துறை பயிற்சி வழங்கப்படவுள்ளது. திரைத்துறை தொடர்பான கருத்தரங்கம், நூலகம், பயிற்சிப்பட்டறை, விவாத அரங்கம் முதலான அனைத்தும் இந்த பட்டறையில்  நடத்தப்படவுள்ளது. இரா.பாஸ்கரன் தலைவர், நக்கீரர் தமிழ்ச் சங்கம்  சபரீஷ் டி.வி.காம், ஜெய ஸ்ரீ மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, எடிட்டர் லெனின், இயக்குநர் செல்வமணி, நடிகர் மோகன், நடிகை தேவயானி, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடலாசிரியர் சினேகன், நடிகர் சின்னி ஜெயந்த்,ஆசிய தமிழ்ச் சங்கம் விசாகன், கவிஞர் முத்துலிங்கம், நடிகை குட்டி பத்மினி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.*******

இயக்குநர் யார் கண்ணன் அவர்களின் கனவுப்பட்டறையாக துவக்கப்பட்டுள்ள இந்த அகாடமியின் துவக்க விழா, நேற்று திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கம் தலைவர், முனைவர் வி. முத்து தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக உச்சநீதி மன்ற வழக்கறிஞர் டாக்டர். வேலஸ்ரீ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்