தமிழ் நாடு அரசின் தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது என் ற தகவலே தொலைக்காட்சி வழி பார்த்து அறிந்து கொண்டபோது மனம் நெகிழ்ந்ததாக விருது பெரும் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் குறிப்பிட்டார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் மலேசியப் படைப்பாளர்களுக்கும் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ் டாலின் அவர்கள் வழங் கி இருக்கும் அங்கீகாரம் இந்த விருது என் று பெ.இராஜேந்திரன் சொன்னார். தமிழ் மண்ணில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு முகவரி தகாடுத்தவர் முத்தமிழ் மூதறிஞர் கலைஞர் அவர்கள். 2007ஆம் ஆண்டு, மலேசிய எழுத்தாளரக்ளுக்குத் ‘தமிழ் நாடு அரசு விருந்தினரகள் ’ என்கிற உயரிய அங்கீகாரம் வழங்கினார். எங்களை வரவேற்று தமிழகம் முழுவதும் மலேசிய இலக்கியம் அறிமுகமாக தளம் அமைத்துக் கொடுத்தவர் எங்கள் நினைவில் வாழும் முத்தமிழ் மூதறிஞர் அவர்கள். அவர் ஏற்படுத்திக் கொடுத்த தொடர்புகளைப் பயன்படுத்தி சங்கத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் வளரச்சி்த் துறை, உலகத் தமிழ்ச் சங்கம், உலக தமிழ் ஆராய்சசி் நிறுவனம் , தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணையுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கான எண்ணற்ற திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தினோம். இதற்கெல்லாம் முத்தமிழ் மூதறிஞர் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த தொடர்புகள்தான் துணைபுரிந்தன.
இவ்வாண்டு மணிவிழா காணும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் உலகளாவிய நிலையில் தொடர்புகளை ஏற்படுத்தி பணியாற்றி வருகிறது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு ‘தமிழ்த்தாய் ’ விருது வழங்கப்படும் தகவலே தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ் டாலின் அவர்கள். அறிவித்தபோது நெகிழ்ந்து விட்டேன். கண்களில் நீர் கசிந்தது. இத்தனை ஆண்டுகாலம் உழைப்புக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் மிகப் பெரிய அங்கீகாரம் வழங்கியுள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சாரபி்லும் மலேசியத் தமிழர்கள் சாரபி்லும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பெ.இராஜேந்திரன் கூறினார்.