சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ” இ.எம்.ஐ ” மாதத் தவணை “. இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது: இ.எம்.ஐ. தலைப்பே எளிதாக புரிகிறது. சில நேரம் படத்தலைப்பு புரியாது, இந்த தலைப்பிலேயே புரிந்து விடுகிறது. தயாரிப்பாளர் மல்லையன், இயக்குநரையே நடிகராகத் தைரியமாக ஆக்கியுள்ளார் அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இசையமைப்பாளர் மிக அருமையாகப் பாடல. தந்துள்ளார், தொழில் நுட்ப கலைஞர்கள் மிக நன்றாக வேலை பார்த்துள்ளனர். காட்சிகள் பார்க்க நன்றாக வந்துள்ளது. ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்துள்ள இந்த குழுவிற்கு என்வாழ்த்துக்கள். நானே முதல் படத்திற்கு ஒரு மொக்கை கதையைத் தான் வைத்திருந்தேன் ஆனால. உதவி இயக்குநராக வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு, அதைத் தூக்கிப் போட்டுவிட்டேன். நம்வாழ்க்கையிலிருந்து கதையை எடுப்போம் என கதை செய்தேன். நம் வாழ்க்கையை எடுத்தால் படம் ஜெயிக்கும். இ.எம்.ஐ. எல்லோரும் அனுபவிப்பது தான். இதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நகைச்சுவையோடு படத்தை சொல்லியிருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள், படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி. என்றார். கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், ஓ.ஏ.கே. சுந்தர் லொள்ளுசபா மனோகர், டி.கே.எஸ், செந்தி குமாரி, ஆகியோர் நடித்துள்ளனர்.*******
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மல்லையன் பேசியதாவது…. எங்கள் பட விழாவிற்கு வருகை தந்திருக்கும் திரை ஆளுமைகள் அனைவருக்கும் மிகப்பெரியநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். EMI எடுத்து எத்தனையோ பேர் மனநிம்மதி இல்லாமல்தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். பலர் EMI ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் கதையைஇந்த EMI படம் சொல்கிறது. EMI எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வைஇந்தப்படம் பேசியுள்ளது, அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன் நன்றி.
இயக்குநர் சதாசிவம் சின்னராஜ் பேசியதாவது.. EMI படம் என் வாழ்வில் நான் நேரிடையாக பார்த்தது. ஒரு நண்பருக்குத் தொடர்ந்து கால் வந்துகொண்டே இருந்தது ஆனால் அவர் அட்டன் செய்யவே இல்லை, கார் எடுத்துவிட்டு EMI டார்ச்சரைஅனுபவித்தார். அதை நேரில் கண்டபோது தான் இது அனைவர் வாழ்விலும் நடக்கும், அதைஎடுக்கலாம் என முடிவு செய்தேன். முதல் முதலில் கதையைப் பேரரசு சாரிடம் சொன்னேன், இப்போது வரை படத்திற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறார். முதலில் 4 பேர் சேர்ந்து தான்தயாரிப்பதாகத்தான் இருந்தது, ஆனால் தயாரிப்பாளர் மல்லையன், நீ ஏன் எல்லோருக்கும் பதில்செய்கிறாய், நானே தயாரிக்கிறேன் என்று, என்னை நம்பி இறங்கினார். அவருக்கு என் நன்றி. இந்தப்படத்தில் சமூகத்திற்கான கருத்தை பேசியுள்ளோம். எல்லோர் வாழ்விலும் இதைஅனுபவித்திருப்பார்கள் அதைத்தான் படமாக எடுத்துள்ளோம். நான் முதலில் நடிப்பதாக இல்லை, எந்த ஹீரோவும் சின்ன பட்ஜெட்டுக்கு ஒத்துக்கொள்ள வில்லை அதனால் தான் நானே நடித்துவிடலாம் என இறங்கி விட்டேன். நல்ல படம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.