ஆளுநரின் உத்தரவுகளை கண்டுகொள்ள வேண்டாம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநரின் உத்தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநரின் அதிரடி உத்தரவுகள் அம்மாநில முதல்வர் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திரும்ப அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
ஆளுநரை திரும்ப அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை வரை இந்த சர்ச்சை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஆளுநர் உங்களை அழைத்து உத்தரவுகள் பிறப்பித்தால், அதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம், நீங்கள் மாநில அரசு பணியில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஆளுநரின் உத்தரவை பொருட்படுத்த வேண்டாம், ஏதாவது அழுத்தம் வந்தால் என்னிடம் சொல்லுங்கள் என போலீஸ் எஸ்பிக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.