புதிய முயற்சியில் எடுத்திருக்கும் படம் “மின்மினி”

மனோஜ் பரம்மஹம்சா தயாரிப்பில் ஹாலிதா ஷாமிம் இயக்கத்தில் பர்வீன் கிஷோர், ஹவுரவ் காலை, எஸ்தர் அனில் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மின்மினி”. இந்தப் படத்தை புதிய முயற்சியாக சிறுவயதில் நடித்தவர்களையே பருவ வயதில் நடிக்க வைத்திருப்பதான். அதற்காக 7 வருடங்கள் காத்திருக்கிறார் இயக்குநர். அதாவது 2015 ஆம் ஆண்டில் சிறுவயதாக இருந்த மூவரையும் நடிக்க வைத்து அவர்கள் இளம் வயது அடையும் வரை 2022 ஆம் ஆண்டு வரை காத்திருந்து நடிக்க வைத்திருக்கிறார். பள்ளிப்பருவத்தில் மூவரும் நண்பர்கள். அவர்கள் இமயமலைக்கு சுற்றுலாப் பயணம் செல்ல ஆசைபடுகிறார்கள். சிறுவர்களாக இருப்பதால் அக்காலத்தில் செல்ல முடியவில்லை. மூவரரின் குடும்பமும் வெவ்வேறு ஊர்களுக்கு செல்கிறார்கள். ஆனால் இயமமலைக்கு செல்ல் வேண்டும் என்ற ஆசைமட்டும் மூவரின் உள்ளத்திலும் இருக்கிறது. பருவ வயதில் அவர்கள் இமயமலைக்கு சென்றார்களா? மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தார்களா? என்பதுதான் கதை. படத்தின்  வெற்றியே இமயமலையின் அழகை வெள்ளித்திரையில் காண்பித்த ஒளிப்பதிவாளர் மனோஜ்தான். இமயமலைக்கு நாமே சென்றுவந்த உணர்வு ஏற்படுகிறது. பெண்கள் துணிவுடன் வாழ்க்கையை எதிர் கொள்ள வேண்டும் என்பதை இப்படம் சொல்கிறது