திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அறிவித்த தர்ம யுக ஸ்தாபக விழா நடைபெற்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் 1987 ஆம் வருடம் அக்டோபர் 3-ம் நாள் கொடியினை ஏற்றி வைத்தார்கள். ஸ்ரீமந் நாராயணரின் கொடியானது அன்புக் கொடி என்று அழைக்கப்படுகிறது. இறைவனின் தெய்வீக ஆட்சியில் ஒவ்வொருவரும் பங்கு உள்ளவர்கள் என்பதை காண்பிப்பதற்காக கொடியினை இல்லங்களில் ஏற்றி மகிழ்கின்றனர். உலகமெங்கிலும் உள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் தியான நிலையங்களிலும் பக்தர்களின் இல்லங்களிலும் நாராயணரின் கொடியானது ஏற்றப்படுகிறது. அகில உலக தலைமையகமான மனுஜோதி ஆசிரமத்தில் தலைவர் திரு. பால் உப்பாஸ் லாறியும் அவரது சகோதரர் திரு. லியோ பாலும் அன்பு கொடியினை ஏற்றி வைத்தார்கள். இவ்விழாவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கொள்கைகளை விளக்கிக் கூறினார்கள். இறைவனின் ஆட்சி நடைபெறுகிறது என்பதை இவ்வுலகத்திற்கு காண்பிப்பதற்காக ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களில் கொடியினை ஏற்றி ஆண்டுதோறும் இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர். கடவுள் ஒருவர் என்ற கொள்கையினைப் பின்பற்றுகிற மக்கள் தர்ம யுகம் பிறந்து விட்டது என்று அறிவித்து ஏழை எளியவருக்கு அன்னதானம் கொடுத்து இவ்விழாவினை கொண்டாடுகின்றனர்.