சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு

“எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில்  வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. “திரு.மாணிக்கம்”  படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் பெருவாரியான திரையர‌ங்குகளில் வெளியிடப்படுகிறது.  குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற  இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார். கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன் அனன்யா, தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன்,  இரவின் நிழல் சந்துரு..ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.*******