இதுகுறித்து , தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடங்களுக்கான செய்தி. கடும் மழை மற்றும் நிலச்சரிவால் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 37 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் ஏற்கனவே அனுப்பிவைத்தது. அதன் பிறகு வசூலான தொகை ரூபாய் 1,12,384 ற்கான காசோலையை, கேரள மாநில முதலமைச்சர் திரு பினராய் விஜயன் அவர்களை இன்று ( 29.08.2024) காலை 11.30 மணிக்கு ,திருவனந்தபுரத்தில் நேரடியாக சந்தித்து வழங்கினர் . தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தஞ்சை மருத்துவக் கல்லூரி வி. சுபா ,ச. கிஷோர் குமார் , திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஜா. மைக் டெலிகேட் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி சி. தேவ அரசு ஆகியோர் கேரள மாநில முதல்வரை சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.