மக்கள் திலகம் M.G.R. முதன்முதலாக இரட்டை வேடத்தில் கதாநாயகனாகவும், பானுமதி, சரோஜாதேவி மற்றும் M.N.ராஜம் கதாநாயகிகளாகவும் நடிக்க, மக்கள் திலகம் M.G.R. இயக்கி தயாரித்தார். இப்படத்தின் பின்பகுதியில் சரோஜாதேவி அறிமுகமாகும் காட்சியிலிருந்து இத்திரைப்படம் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்திற்கு மாறும், இத்திரைப்படமே சரோஜாதேவி கதாநாயகியாக அறிமுகமான திரைப்படமாகும், திரைப்பட தயாரிப்பாளர் R.M.வீரப்பனின் சிபாரிசால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். “தமிழ்த் திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம்” என அழைக்கப்படும் பிரபல போட்டோகிராபர், பத்திரிக்கையாளர், திரைப்பட PRO மற்றும் நடிகர், “கலைமாமணி” “பிலிம் நியூஸ்” ஆனந்தன் (P.G. அனந்த கிருஷ்ணன்) ஐ இத்திரைப்படத்தில் முதன்முதலாக PRO ஆக நியமித்தார். இணைப்பில் “நாடோடி மன்னன்” திரைப்பட விளம்பரத்துடன் வெளியிடப்பட்ட எம்.ஜி.ஆர். பிக்சர்சின் தபால் கவர் மற்றும் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் மறு வெளியீடு செய்த . “நாடோடி மன்னன்” திரைப்பட வெளியீட்டுவிழா சிறப்பு மலர்.