மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் தமிழ்நாடுகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்டாக்டர். வள்ளி, முதல்வர், அடிப்படை அறிவியல், மற்றும் கால்நடைகள் உணவியல் துறைவல்லுநர்களுடன் ஆவின் கால்நடை தீவனத்தின்தரத்தை மேலும் மேம்படுத்த கலந்தாலோசனைக்கூட்டம், சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில்இன்று (19.07.2023) நடைபெற்றது. இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர் மற்றும்மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத் இ.ஆ.ப., அவர்கள், ஆவின் உயர் அதிகாரிகள் மற்றும்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.