மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் சென்னை, நந்தனம்ஆவின் இல்லத்தில் 20.07.2023 அனைத்து மாவட்ட துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) மற்றும் மாவட்டபால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வுக் கூட்டத்தில் மாவட்ட வாரியாக பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை அதிகரிக்கவும், பால்மற்றும் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரித்தல், அனைத்து ஒன்றியங்கள் மற்றும்இணையத்திலுள்ள பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடு, முந்தைய ஆய்வுக்கூட்டங்களில் வழங்கியஉத்தரவுகள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து மேலும் மேம்படுத்த அறிவுரை வழங்கினார். பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத் இ.ஆ.ப., அவர்கள், உயர்அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.