பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட பொது மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள 9057 பிரதமபால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளைகணினிமயமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக கணினி வசதி உள்ள 2595 சங்கங்களைகணினிமயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதில் 559 சங்கங்கள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவுசங்கங்களின்செயல்பாடுகளை அதன் பால் வழங்கும் உறுப்பினர்களின்எண்ணிக்கை, பால் கொள்முதல், நிகர இலாபம், பால் உபபொருட்களின் விற்பனை அளவு போன்றவற்றின்அடிப்படையில் சங்கங்களை வகைப்படுத்தி அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது. ஆவின் நிருவாகத்தில் தொழில்நுட்பத்தைபயன்படுத்தி முழுமையான மின் ஆளுமைக்கு உட்படுத்தும்பணிகள் மேற்கொள்ளவும், இதன் துவக்கமாக ஒவ்வொருஒன்றியங்களுக்கும் துணை பதிவாளர் அலுவலர்களுக்கும்மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டுள்ளது. மனிதவள ஆற்றலை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அனைத்து சங்கப்பணியாளர்கள், விவசாயிகள் மற்றம் ஆவின்பணியாளர்களுக்கும் வழங்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் துறைசார்ந்த திட்டங்களும், அரசின் இதர துறைசார்ந்ததிட்டங்களும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு வழங்கிய ரூ.3 ஊக்கத்தொகை தற்போதுசங்கங்கள் வழங்கி வருவதை ஒன்றியத்தில் இருந்துஉறுப்பினர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தஅறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ள வருவாய்கிராமங்களில் புதிதாக சங்கங்கள் அமைக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தெரிவித்தார்.