குறட்டை விடுவதால் ஏற்படும் குடும்ப சிக்கலை சொல்லும் படம் ‘குட் நைட்’

மில்லியன் டாலர்ஸ் தயாரிப்பில் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன் நடித்திருக்கும் படம் ‘குட் நைட்’ . மணிகண்டன் அதிக சத்தத்துடன் இரவு தூக்கத்தில் குறட்டை விடுகிறார். இதனால் அவரின் மனைவி மீதா ரகுநாத்துக்கு தூக்கம் இல்லாமல் போய்விடுகிறது. மனைவியின் தூக்கத்திற்கு குறட்டை இடைஞ்சலாக இருப்பதால் தனி அறையில் போய் படுத்த்க் கொள்கிறார் மணிகண்டன். இதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படுகிறது. குறைட்டை விடாமலிருக்க பலவிதமான மருந்துகளை சாப்பிடுகிறார் பயிற்சியும் செய்கிறார். இதில் எதுவும் பயன் தரவில்லை. இக்கதையை வைத்து அழகான கணவன் மனைவியின் பாசத்தை வெளிபடுத்திருக்கும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தூக்கமில்லாமல் மனைவி துன்பபடுவதை பார்த்து அழுகின்ற காட்சியில் மணிகண்டன் படம் பார்ப்பவர்களின் மனதில் நிறைந்து நிற்கிறார். தனக்காக தனது கணவர் அழுகின்றபோது அவருக்கு ஆறுதல் கூறி அரவணைக்கும் காட்சியில் மீதா ரகுநாத் தனித்துவம் படைத்திருக்கிறார். குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம் குட் நைட்***********