”சினிமா இல்லை எப்றால் விதார்த் இறந்து விடுவான்” – மிஷ்கின்

ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில்  இயக்குநர் மிஷ்கின் பேசும் போது,இந்த வாழ்க்கையில் வெற்றி என்பது ஒன்றுமே இல்லை, அது போல் தான்தோல்வியும் ஒன்றுமே இல்லை. இந்த வாழ்க்கையில் நீங்கள் பெரிதாய் எதும் செய்துவிட முடியாதுசாமான்ய மனிதன் தன் குடும்ப உறவினர்களுக்காக உழைக்கிறான்இன்னும் வெகு சில மனிதர்கள் இந்த உலக மக்களுக்காக உழைக்கிறார்கள். அவர்கள் வெகு சிலரேஅது எல்லாராலும் முடியாது. ஒரு படத்தை  நீங்கள் உண்மையாக  எடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த படத்திற்குள் கேளிக்கைகள்சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கலாம். அதை மீறி நெஞ்சைத் தைப்பது போல் ஒரு விஷயம் இருக்கவேண்டும் என்று சொல்வேன். அதுதான்  திரைப்படத்திற்கான உயிர்நான் விதார்த்திடம் நீ இன்னும் 50 வருடம் நடித்துக் கொண்டிருப்பாய்என்று கூறினேன். அவன் சினிமா இல்லை என்றால் இறந்துவிடுவான்சினிமாவில் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்கும் நபர் விதார்த்.. நானும் அப்படித்தான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன்.*****

விஜய் சேதுபதியைப் போல் விதார்த் முகத்திலும்தமிழ் லான்ஸ்கெப் landscape இருக்கும்.  அருண் மிகவும் ஸ்மார்ட் ஆன பையன்.. நிறைய படிப்பான்…. படித்துவிட்டு என்னுடன் அதிகமாகவிவாதிப்பான்…  சினிமாவில் முப்பது வருட நட்பு இருக்குமா என்று கேட்டால் சந்தேகம் தான்ஏதோவொரு குணநலத்தால் நிகழ்வால் அந்த நட்பு எங்காவது உடைந்துவிடும், ஆனால் ஸ்ரீகாந்த் உடன் முப்பதுஆண்டிற்கும் மேலாக நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறதுநான் ஓடிக் கொண்டிருந்தால் வந்து ஷூகொடுப்பார்இரவு முழுவதும் படிக்கும் போது, என் அறை மூலையில் எனக்காக டீ போட்டுக் கொண்டுஇருப்பார்என் மகளை தன் குழந்தைப் போல் பார்த்துக் கொள்கிறார். இந்த வாழ்க்கையில் நான்சம்பாதித்தது ஸ்ரீகாந்த் நட்பை தான்.. நான் சாகும் போது அவன் என்னுடன் இருப்பான்நட்பு மிகமுக்கியம்இன்று எதுகுறித்துப் பேசுவது என்று தெரியவில்லை. அதனால் தான் நான் நட்பைப் பற்றிபேசலாம் என்று முடிவு செய்தேன்.

Living truthfully in an imaginary situation  என்பது நடிப்பு பற்றி கொடுக்கப்படும் விளக்கம். நடிக்கும்போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர் நடிகைகள் என்பேன்.. பூர்ணா அந்த மாதிரியானநடிகை. சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன்அந்தகதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணாபூர்ணாவின் குழந்தை காலை எடுத்து என் தலையில்வைத்துக் கொண்டேன்.. அது போல் தான் பூர்ணாவின் காலையும்பூர்ணா என் வாழ்க்கையில் மிகமுக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய்போல் அவள் பார்த்துக் கொள்வாள். என்னையும் அவளையும் குறித்து சிலர் தவறாகப் பேசுவார்கள். அவள்எனக்குத் தாய் போன்றவள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்றுபிரார்த்திக்கிறேன்…. அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற படங்களில்அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பாள்.

என் தம்பி மிக எளிமையானவன், வாழ்க்கையின் கஷ்டங்களை இப்பொழுது புரிந்து கொள்ளதுவங்கியிருக்கிறான்…. அவன் மொழியில் வளமை இல்லை என்றாலும் உணர்வு இருக்கிறதுவெற்றிமாறனுக்குப் பிறகு நாவலில் இருந்து கதையை எடுத்திருக்கிறான்அந்த ஸ்கிரிப்டில் என்னைதலையிடக்கூடாது என்று  சொல்லிட்டான்.. இன்றுவரை அந்த ஸ்கிரிப்டை எனக்கு படிக்ககொடுக்கவில்லை. கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன்வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், எதற்காக வாழ வேண்டும் என்பதற்கான கேள்விகளின் பதில் இருப்பதால் இப்படம் நல்ல படம் என்பேன்சில முயற்சிகள் எடுத்திருக்கிறான்மிகச்சிறந்த படம் என்று சொல்வதற்கில்லை.

ஒரு பெண்ணின் உணர்வு நிலையில் ஏற்படும் குழப்பநிலை இது காதலா.. இல்லை காமமா என்கின்றகுழப்பத்தை பதிவு செய்திருக்கிறான்

இசையில் நூறு மார்க் வாங்குபவர்கள் எப்பொழுதும் இளையராஜாவும் .ஆர்.ரஹ்மானும் தான். நான்இளையராஜா ஐயாவிடம் இருந்து சண்டை போட்டு வந்ததற்குப் பின்னர் 6 ஆண்டுகளாக இசையை கற்றுவருகிறேன்இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டதும் ஏற்றுக் கொண்டு இசையமைத்துஇருக்கிறேன்…. என் இசைக்கு  35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நம்புகிறேன்

பத்திரிக்கை நண்பர்களாகிய நீங்கள் டெவில் திரைப்படம் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறதுஎன்று எழுதுங்கள். நன்றாக இல்லை என்றால் ஆதரவு கொடுக்க வேண்டாம். தம்பி படம் நன்றாகஇருந்தால் கண்டிப்பாக ஓடும்நன்றாக இல்லை என்றால், ஓடாதுபரவாயில்லை. தொடர்ச்சியாக நீஓடுதோல்வி என்பது ஒன்றுமே இல்லைநீ தொடர்ச்சியாக ஓடிக் கொண்டே இரு.. இந்த நிகழ்விற்குவந்த அனைவருக்கும் நன்றிஎன்று பேசினார்.