மியன்மாரில் நூறாண்டு பழமை வாய்ந்த கோயில் கும்பாபிஷேக விழா


மியன்மார்
நாட்டின் யாங்கோன் மாநிலத்தில் நூறாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ தில்லைமா காளியம்மன்திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா சென்ற நவம்பர் மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை சிறப்பாகநடைபெற்றது. மிகவும் தொன்மை வாய்ந்த இத்திருக்கோயிலின் மறுசீரமைப்புப் பணிகள் சுமார் ஒன்பதுவருடங்கள் நடைபெற்றன. இதற்காக இந்தியாவிலிருந்து சிற்பக்கலை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் யாங்கோன் மாநிலத்திலேயே தங்கியிருந்து ஆலய சிற்பங்களை ஆகம விதிப்படி மிகச்சிறப்பாக வடிவமைத்தனர். பிள்ளையார் பட்டியில் இருந்து சைவப் பேரரசர் விகாஸ் ரத்னா Dr. K. சிவஸ்ரீ பிச்சைசிவாச்சாரியார் தலைமையில் அறுபது சிவாச்சாரியார்கள் வந்திருந்து குடமுழக்கு விழாவினை சீரும் சிறப்புமாகநடத்திக் கொடுத்தனர்.
48
நாட்கள் நடைபெற்ற மண்டலாபிஷேக பூஜைகளில் மியன்மார் தமிழ் மக்கள் கலந்துகொண்டு பக்திப் பரவசத்தில் மூழ்கித் திளைத்தனர். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கிணங்க இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் வெள்ளத்தில் மிகப்பெரிய அளவில் ஸ்ரீ தில்லைமா காளியம்மன் மஹாகும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாஎன்பது தமிழ் மூதாட்டி ஒளவையின் அருள் வாக்கு. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதை நன்குணர்ந்தபர்மியத் தமிழர்கள் வீதிதோறும் ஆலயம் அமைத்து தொன்றுதொட்டு வழிபட்டு வந்திருக்கிறார்கள்  என்பது  தமிழுலகம் பெருமைபடத் தகுந்த ஒன்று. சில வீதிகளில் இரண்டு மூன்று கோயில்கள் இருப்பதையும் மியன்மார்நாட்டில் பார்க்க முடிகிறது. இது நம் பர்மியத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரு கூடுதல் சிறப்பாகும்.