மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.11.2022) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, மதுரை, திருவாரூர், தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 9 கோடியே 92இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 6 விடுதிக்கட்டடங்கள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 51 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 பள்ளிக்கட்டடங்கள் மற்றும் செங்கல்பட்டு, நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 17 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்பள்ளிக் கட்டடங்களை திறந்துவைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக-பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மானியத்துடன் கூடிய கடனுதவி, அவ்விளைஞர்களுக்கு சுயதொழில் / வேலைவாய்ப்பினை உருவக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்சென்னை மாவட்டம் – சைதாப்பேட்டையில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதுகலை கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம், மதுரை மாவட்டம் – மதுரையில் 1கோடியே 26 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம், திருவாரூர்மாவட்டம் – எடையூரில் 1 கோடியே 27 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம்மற்றும் கொரடாச்சேரியில் 1 கோடியே 27 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம், தென்காசி மாவட்டம் – சோலைச்சேரியில் 1கோடியே 26 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்; கிருஷ்ணகிரி மாவட்டம் – போஜனபள்ளியில் 3 கோடியே 35இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம், என 300 மாணவர்கள் மற்றும் 150 மாணவிகள் பயன்பெறும் வகையில் 6 இடங்களில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதிக் கட்டடங்கள்;
திருவள்ளூர் மாவட்டம் – தேர்வாயில் 3 கோடியே 70 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவிலும், காஞ்சிபுரம் மாவட்டம் – மௌலிவாக்கத்தில் 3 கோடியே 44 இலட்சத்து 41ஆயிரம் ரூபாய் செலவிலும், ஈஞ்சம்பாக்கத்தில் 1 கோடியே 74இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், மயிலாடுதுறை மாவட்டம் – கொண்டலில் 1 கோடியே 62 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவிலும், 916 மாணவர்கள் மற்றும் 839 மாணவிகள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள 4ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறைக்கட்டடங்கள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள்;
செங்கல்பட்டு மாவட்டம் – குமிழியில் 12 கோடி ரூபாய் செலவிலும், நீலகிரி மாவட்டம் – மு. பாலாடாவில் 2 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம் – செங்கரையில் 2 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவிலும் ஒரு பள்ளியில் 480 மாணவர்கள் பயிலும் வகையில் கட்டப்பட்டுள்ள 3 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்கள்;
என மொத்தம் 37 கோடியே 66 இலட்சத்து 5 ஆயிரம்ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். மேலும், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் பொருட்டு அம்மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கென தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினிப் பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 197 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு Indian Institute of Technology மூலம் B.S. Data Science & Applications, எச்.சி.எல் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பயில பயிற்சி தொகை, Indian Health Care மூலம் Medical Coding பயிற்சி, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்ட்யூட் மூலம் B.Sc., (Hospitality & Hotel Administration) மற்றும் Diploma in Food Production, Craftsman Ship ஆகியவேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சிக்கு தேர்வாகியுள்ள 130 மாணவ, மாணவியர்களுக்கு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்9 மாணவ, மாணவியர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர்
திரு. உ. மதிவாணன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தென்காசி சுஜவஹர், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் திரு. த. ஆனந்த், இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் திரு.கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு. ச. அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.