மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 3.12.2022 அன்று நடைபெற்ற விழாவில், “வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 இலட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இன்று (6.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் திருமதி. பா. ஜான்சிராணி, டிசம்பர்-3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி.எம்.என். தீபக், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் திரு. பி. சிம்மச்சந்திரன், தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குநர் திரு. பி. மனோகரன், தமிழ்நாடு உதவிக்கரம் – மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் திரு. டி.ஏ.பி. வரதகுட்டி, இந்திய மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தின் தலைவர் திரு. ம. சகாதேவன், நேத்ரோதயா நிறுவனர் – அறங்காவலர் திரு. சி. கோவிந்தகிருஷ்ணன், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. ரெ. தங்கம், காது கேளாத மற்றும் பேச இயலாத மாற்றுத் திறனுடையோர் பாதுகாப்பு பவுண்டேசன் தலைவர் மற்றும் நிறுவனர் திரு. சு. அப்துல் லத்தீப், சிவகங்கை மாவட்டம், தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் திரு.கே.ஜே.டி. புஷ்பராஜ், தமிழ்நாடு உயரம் குறைந்தோர் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் திரு. எம்.ஜி. ராகுல், தென்காசி மாவட்டம், அமர் சேவா சங்கத்தின் உறுப்பினர் திரு. என். அழகப்பன், தமிழ்நாடுபார்வையற்றோர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்
திருமதி பூங்காவனம், காதுகேளாதோருக்கான கூட்டமைப்பின் திரு. ரமேஷ் பாபு மற்றும் திரு. மோகன், அனைத்து குறைபாடுகள் உள்ள பெண்களின்உரிமைகளுக்கான சங்கத்தின் (Society for Rights of all Women with Disabilities) திரு. பி. அருணாதேவி மற்றும் சங்க பிரதிநிதிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன் அவர்கள் உடனிருந்தார்.