மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.12.2022) தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், இராணிப்பேட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
முதலமைச்சராக பதவியேற்றப் பிறகு முதன்முறையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றிரவு (7.12.2022) சென்னையிலிருந்து தென்காசிக்கு இரயில் மூலம் பயணம் மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (8.12.2022) காலை சென்றடைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தென்காசி இரயில் நிலையத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெரியோர்கள், தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று காலை தென்காசி இரயில் நிலையத்திலிருந்து விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திரண்டிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
இன்றைய தினம் தென்காசியில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் விவரங்கள்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், 4 கோடியே 25 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவில் மருதம்புத்தூர், வேலாயுதபுரம், இலத்தூர், விஸ்வநாதபேரி, குத்துக்கல் வலசை ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகக்கட்டடங்கள், வலங்கைப்பலிசமுத்திரம், கரைகண்டார்குளம், களப்பாகுளம், அரியநாயகிபுரம், வீரிருப்பு, மைலப்பபுரம், ஐந்தான்கட்டளை, தேவிப்பட்டிணம், கூடலூர், சங்கனாப்பேரி, ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்கள். தென்காசி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள உணவு தானியக்கிடங்கு, ஆலங்குளம் ஒன்றியம், ஓடைமறிச்சான் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி, கோ-மருதப்பபுரம் மற்றும் குலசேகரமங்கலம் ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடம்,குருவிகுளம் ஒன்றியம், பழங்கோட்டை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கலையரங்கக் கட்டடம்,வாசுதேவநல்லூர் ஒன்றியம், நெற்கட்டும்செவல் ஊராட்சி, பச்சேரியில் கட்டப்பட்டுள்ள 45 பசுமை வீடுகள், கடையநல்லூர் ஒன்றியம், நெடுவயல் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகம், வாசுதேவநல்லூர் ஒன்றியம், முள்ளிகுளம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி,செங்கோட்டை ஒன்றியம் சீவநல்லூர், திருவெற்றியூரில் பயணிகள் நிழற்குடை;
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்செங்கோட்டையில் 70 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மண்பரிசோதனைக்கூடம்;
வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஊத்துமலை, வீரகேரளம்புதூர், ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களில் 1 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வல்லத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய புற நோயாளிகள் பகுதி, கம்பனேரி மற்றும் மடத்துப்பட்டி பகுதிகளில் 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள், ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்பு;
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் செவல்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான கழிப்பறைகள்;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தென்காசி நகராட்சியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் பூங்கா மற்றும் மங்கம்மாள் சாலை பகுதியில் சுகாதார நல மையம், சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் 3 கோடியே 16 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கசடு கழிவு மேலாண்மை மையம், கடையநல்லுார் நகராட்சியில் 1 கோடியே 16 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் குமந்தாபுரம் மற்றும் மேலக்கடையநல்லூர் பகுதிகளில் நகர்புற நல மையம், அண்ணாமலை பொய்கை மேம்படுத்தும் பணி, திருமால் விழுங்கி ஊரணி மேம்படுத்தும் பணிகள்;
பொதுப்பணித் துறை (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு) சார்பில் அ.கரிசல்குளம், பழங்கோட்டை, மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய கிராமங்களில் 63 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்புகள், தலைவன்கோட்டை, சங்கரன்கோவில் மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 52 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சித்த மருத்துவ பிரிவுகள், சங்கரன்கோவில் நடுவக்குறிச்சியில் 3 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி;
வனத்துறை சார்பில் புளியங்குடி தலையணை வனப்பகுதியில் வனத்தீ ஏற்படாமல் தடுக்க 3 இலட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை;
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடையநல்லூர் நகராட்சியில் 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் விற்பனை அங்காடி;
சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் மத்தளம்பாறை, ஐந்தாம் கட்டளை மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய கிராமங்களில் 32 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையக் கட்டடங்கள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தாட்கோ சார்பில் காரிசாத்தன், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில்
2 கோடியே 1 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில்அரசு ஆதிதிராவிடர் நல நவீன சமுதாயக்கூடங்கள்;
என மொத்தம் 22 கோடியே 20 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 57 முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும், இவ்விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் விவரங்கள்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 1 கோடியே 56 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நெற்கட்டும்செவலில் ஊராட்சி மன்றக்கட்டடம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, குத்தப்பாஞ்சான், மலையராமபுரம், செல்வவிநாயகபுரம், நாகல்குளம், இலத்தூர், சுமைதீர்த்தபுரம், காசிமேஜர்புரம், நெற்கட்டும்செவல் மற்றும் ஆண்டார்குளம் ஆகிய கிராமங்களில் நியாய விலைக்கடைகள் கட்டும் பணி;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனையில் 30 கோடியே 2 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மையம், தாய்சேய் நலக் கட்டடம், சிறார் திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள்;
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கடையநல்லூர் வட்டாரத்தில் குமந்தாபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டடங்கள்;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புளியங்குடி நகராட்சி பகுதியில் 1கோடியே 44 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி;
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் சார்பில் பாவூர்ச்சத்திரத்தில் 72 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்தமிழ்நாட்டிலுள்ள நாட்டின நாய்களுக்கான இனப்பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்;
என மொத்தம் 34 கோடியே 14 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இவ்விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் விவரங்கள்:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 11,996 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், இ-பட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 6246 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 5399 பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ்நலத்திட்ட உதவிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 12371 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், நுண்ணீர் பாசன திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 1048 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், கூட்டுறவு துறை சார்பில் 3400 பயனாளிகளுக்கு கறவை மாடு கடன், சிறுவணிகக் கடன், பணிபுரியும் மகளிர் கடன், வீட்டுவசதி கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டஉதவிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 124 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டி, தையல் இயந்திரம், உலமாக்களுக்கு இலவச மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4605 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலிகள், நடைவண்டி, ஊன்றுகோல்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 3500 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய அட்டைகள், புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக செய்திப் பிரிவில் செய்தியாளராக பணியாற்றி வந்த திரு.ச.முத்துகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்ததையொட்டி அவரது தாயாரிடம்பத்திரிகையாளர் குடும்ப உதவி திட்டத்தின் கீழ் 3 இலட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபாய், என மொத்தம் 5 இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,03,508பயனாளிகளுக்கு 182 கோடியே 56 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தென்காசி, வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, அப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும்திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்
திரு. இ. பெரியசாமி, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர்
திரு.பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்திரு.எம்.தனுஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பழனிநாடார், திரு.ஈ.ராஜா,
டாக்டர் தி. சதன் திருமலைக்குமார், திரு. எம். அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு. பி.எம். சரவணன், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப. ஆகாஷ், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.