தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் நாசர் நேரில் வாழ்த்து தெரிவித்தார். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம். பி., திமுக தலைமை நிலையசெயலாளரும் நடிகர் சங்க துணைத் தலைவருமான பூச்சி எஸ். முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.