முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகம்முதன்முறையாக 1967ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்தபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக்காணிக்கை‘ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள்அறிவித்தார்கள். ஆறாவது முறை ஆட்சிக்குவந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, அந்தப்பகுத்தறிவுப் பகலவனின் அறிவுச்சுடரைப் போற்றும்விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றைவிதி எண் 110-ன்கீழ் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, இந்த மாமன்றத்தில்வெளியிடுவது என் வாழ்வில் கிடைத்தற்கரியநல்வாய்ப்பு என்பதை எண்ணி மகிழ்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
”ஈ.வெ. இராமசாமி என்கிற நான் திராவிடசமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்றசமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ளசமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். இதைச் செய்யஎனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச்செய்ய யாரும்வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டுதொண்டாற்றி வருகிறேன்” என்றுஅறிவித்துக்கொண்டு, 95 வயது வரை மூத்திரச்சட்டியைத் தூக்கிக் கொண்டு இந்த இனத்துக்காக, நாட்டுக்காகப் போராடியவர்தான் தந்தை பெரியார்அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி)
‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பதையேஅடிப்படையாகக் கொண்டு சுயமரியாதை இயக்கம்தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள் மானமும்அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலகஆசானாக இந்த நாட்டை வலம் வந்தார். அவர் நடத்தியபோராட்டங்கள் யாராலும் ‘காப்பி‘ அடிக்க முடியாதபோராட்டங்கள்; அவர் எழுதிய எழுத்துகள் யாரும்எழுதத் தயங்கும் எழுத்துக்கள்; அவர் பேசியபேச்சுக்கள், யாரும் பேசப் பயப்படும் பேச்சுகள்; தமிழர்நலமெல்லாம் தன்னுடைய நலமாகக் கருதினார்;தமிழர்க்கு எதிரானது எல்லாவற்றையும் தனதுஎதிரியாகக் கொண்டு எதிர்த்திருக்கிறார். அவர் நடந்தநடை, அவர் நடத்திய சுற்றுப்பயணங்கள், அவர்நடத்திய மாநாடுகள், அவர் நடத்தியபோராட்டங்களைச் சொல்லத் தொடங்கினால், இந்தமாமன்றத்தையே பத்து நாட்களுக்கு ஒத்தி வைத்துப்பேச வேண்டும்.
“மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை; ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்” – இவைஇரண்டும்தான் அவரது அடிப்படைக் கொள்கைகள். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு ஆகியஇரண்டும்தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன. அந்த இரண்டுக்கும்எவையெல்லாம் தடையாக இருக்குமோ, அவைஅனைத்தையும் கேள்வி கேட்டார்; அறிவியல்பூர்வமாகக்கேள்வி கேட்டார்; தன்னைப் போலவே சிந்திக்கத்தூண்டினார்.
அவரது சுயமரியாதைச் சிந்தனையால் தமிழினம்சுயமரியாதைச் சிந்தனையைப் பெற்றது; அவர்உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழினம்சிந்தனைத் தெளிவு பெற்றது. சாதியால் அடக்கிஒடுக்கப்பட்ட மனிதர்கள் கல்வி, வேலைவாய்ப்பில்மேன்மையை அடைவதற்கான சமூகநீதிக் கதவைத்திறந்து வைத்தது அவரது கைத்தடியே ஆகும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இன்று இந்தியாமுழுமைக்கும் சமூகநீதிக் கருத்துகள்விதைக்கப்பட்டுள்ளன என்றால், அதற்கு அவர் போட்டஅடித்தளமே காரணம்.
நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாதஅவரால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்முதல் முதலாகத் திருத்தம் செய்யப்பட்டது.சட்டமன்றத்துக்குள் வர ஆசைப்படாத அவரதுசிந்தனை கொண்ட சட்டங்கள் ஏராளமாக இந்தமாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தனதுசிந்தனையை அடுத்தவர் மூலமாகச் செய்ய வைக்கும்அபூர்வமான ஆற்றல் அவருக்குத்தான் இருந்தது.
‘என் வாழ்வில் வசந்த காலம் என்பது தந்தைபெரியாரோடு நான் இளைஞராக இருந்து வலம் வந்தகாலம்தான்‘ என்று நம்மையெல்லாம் உருவாக்கியபேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்.
”பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்”
என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) பேரறிஞர் பெருந்தகையும், தலைவர் கலைஞர் அவர்களும் உருவான குருகுலம்பெரியாருடைய குருகுலமாகும். இந்தக் குருகுலத்துப்பயிற்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தைஉருவாக்கி, அரசியல் புரட்சிகரக் கருத்துக்களைத்தமிழ்நாட்டில் விதைத்து, ஆட்சிக்கு வந்து அதேகொள்கையை நிறைவேற்றி வரும் அந்தக் காட்சியை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இது உலகில்எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் கிடைக்காதபுகழாகும். சீர்திருத்தவாதிகள் பேசிவிட்டுப்போயிருப்பார்கள்; ஆட்சியாளர்களுக்கு அதன்வாசனையே இருக்காது. தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒருசீர்திருத்த இயக்கம், அரசியல் இயக்கமாக மாறி, அந்தஇயக்கம் சீர்திருத்தக் கருத்துக்களைநடைமுறைப்படுத்தி, (மேசையைத் தட்டும் ஒலி)சட்டமாகவும் ஆக்கி அந்தச் சமுதாயத்தை மேன்மைஅடைய வைத்திருக்கிறது.
அவரால் கல்வி பெற்றவர்கள், அவரால்வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள், அவரால்அதிகாரத்தைப் பெற்றவர்கள், அவரால் பெண்ணினம்அடைந்த வளர்ச்சிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்தஎழுச்சிகள் ஆகியவற்றுக்கு இன்றைய தமிழ்நாடேசாட்சி. இந்த விதை தந்தை பெரியார் போட்ட விதை; பேரறிஞர் அண்ணா அதற்கு எருவூட்டினார்; கலைஞர்அவர்கள் வளர்த்தார்கள். அதனை மாபெரும்விருட்சமாகக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்குஇருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி)
சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி,இன உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டகொள்கையைத் தந்தை பெரியார் அவர்கள்உருவாக்கினார்கள். அதுதான் கடந்த நூற்றாண்டில்இந்தச் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது;எதிர்காலத்துக்குப் பாதை அமைத்துத் தரப்போகிறது.
இந்த உணர்வை, உணர்ச்சியை, எழுச்சியை, சிந்தனையை விதைக்கும் அடையாளமாக அறிவாசான்தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாளைஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்‘ ஆகக் கொண்டாடுவதுஎன்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. (மேசையைத் தட்டும் பலத்த ஒலி) தந்தை பெரியாரின்அறிவு வெளிச்சத்தில் வளர்ந்த நாம், நமது நன்றியின்அடையாளமாக இந்த நாளைக் கொண்டாடுவோம்;சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமைக்கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித்தள்ளுவோம்; பெண்களைச் சமநிலையில் மதிப்போம். அந்த எண்ணத்தை விதைக்கும் விதமாக இந்தஉறுதிமொழியைத் தயாரித்துள்ளோம். ஆண்டுதோறும்செப்டம்பர் 17ஆம் நாளன்று தலைமைச் செயலகம்தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும்கீழ்க்கண்ட உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொள்வோம்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்புநெறியும் –
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்புநெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக்கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும்–பகுத்தறிவுக்கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடையசெயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகியகொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக்கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனதுஇரத்த ஓட்டமாக அமையும்!
சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்டசமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்தநாளில் உறுதியேற்கிறேன்!” (மேசையைத் தட்டும் ஒலி)
என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம் என்றுஇந்த மாமன்றத்துக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார் மறைந்தபோது, ‘தந்தை பெரியார்தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார், நாம்தொடர்வோம்‘ என்றார் அன்றைய முதல்வர் கலைஞர்அவர்கள். எனவே, நாம் தொடர்வோம்! தொடர்வோம்! தொடர்வோம்! (மேசையைத் தட்டும் ஒலி)