நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவிகனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும்வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப்பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின்பெற்றோரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவைசிதைக்கும் நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே எதிர்த்துவருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும்முழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க. தவிர்த்துமற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும்ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளசட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச்சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்றஉறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்வழங்குகிறேன்.
நீட் தேர்வு என்பது தகுதியை எடை போடும் தேர்வல்லஎன்பதை, ஆள்மாறாட்டம் – வினாத்தாள் விற்பனை – பயிற்சிநிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள்தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில்சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட் தேர்வுநீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசுதொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிகாகப் பல பயிற்சிவகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச்செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களேஅளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திடக்கோருகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத்தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டைவிரட்டுவோம்.
மாணவி கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோன்றஇன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலைஉருவாக்கிடுவோம்.