கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.97.49 இலட்சம் மதிப்பீட்டிலான கலையரங்கம், விளையாட்டு திடல் மற்றும் பூங்காவை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் 5.10.2021 அன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்ரூ.97.49 இலட்சம்  மதிப்பீட்டிலான கலையரங்கம், மைதானம் மற்றும் பூங்காவைதிறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், எவர்வின் பள்ளியில் தற்காலிகமாக செயல்படவுள்ள அரசு கலைக்கல்லூரிக்கான கட்டடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பியம், ரங்கசாயிதெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.15.31 இலட்சம் மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்திறந்து வைத்து, பார்வையிட்டார். மேலும், மாணாக்கர்களுக்கு கல்விஉபகரங்களை வழங்கி, ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்து, பாராட்டினார்.  அடுத்து, செம்பியம், பார்த்தசாரதி தெருவில் ரூ.26.18 இலட்சம் செலவில்சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இறகு பந்து மைதானம் உள்ளிட்டவசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு திடலை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்விஉபகரணப் பொருட்கள் மற்றும் கல்வி உதவித் தொகை, தொகுதி மக்களுக்குமருத்துவ உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மூன்று சக்கர மோட்டார்வாகனங்கள், தள்ளுவண்டிகள், காதுகேட்கும் கருவிகள், மீன்பாடி வண்டிகள், என 48 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கொளத்தூர், எவர்வின் பள்ளியில் தற்காலிகமாக அமையவுள்ள அரசு கலைக் கல்லூரிக்கான கட்டடங்களைமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்பின்னர், திரு.வி.. நகர், 5-வது தெருவில் 7,500 சதுர அடி பரப்பளவில், ரூ.56 இலட்சம் செலவில் செயற்கை நீரூற்று, சிறுவர் விளையாட்டு கருவிகள், யோகா கூடம், நடைபாதை வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளகலைஞர் மு. கருணாநிதி பூங்காவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்இந்த நிகழ்ச்சிகளில்இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறைஅமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.