முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.10.2021) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கலைக் கல்லூரிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அறிவியல் மையம்ஆகியவற்றில் 102 கோடியே 94 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், பல்நோக்குக் கூடம், கூட்டரங்கம், கழிவறைகள், விடுதிகள், பணியாளர்அறைகள், புத்தாக்க மையம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
உயர்கல்வியினை அனைவரும் அணுகிப்பெறும் வகையிலும், சமத்துவம் மற்றும்சமூகநீதி மனப்பாங்குக்கு உட்பட்டு அனைத்து பிரிவினரையும் கல்வியின் எல்லைக்குள்கொண்டுவரும் வகையிலும் கொள்கைகள் வகுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உயர்கல்வியைமேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகக் கட்டடம் மற்றும் இதர கட்டடங்கள்; செங்கல்பட்டு – இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 கூடுதல் வகுப்பறைகள்; சென்னை மாவட்டம், வியாசர்பாடி – டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில்90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்குக் கூடம்;
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் – புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 கோடியே 87 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள், 2ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் 2 கழிவறை தொகுதிகள்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்–அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 கோடிரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பணியாளர் அறை; கிருஷ்ணகிரி –அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள்; விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம்–டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 96 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள்; விழுப்புரம்–அறிஞர்அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 90 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள்மற்றும் 1 ஆய்வகக் கட்டடம்; திண்டிவனம் –திரு.ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் 1 கோடியே 18 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள்; தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு–பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 82 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள், 4 ஆய்வகக்கட்டடங்கள் மற்றும் கழிவறைகள்; திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு – அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 61 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 கூடுதல் வகுப்பறைகள்; மதுரை மாவட்டம், மதுரை–அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சிமற்றும் விரிவாக்க மையத்தில் 1 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 வகுப்பறைகள், 1 ஆய்வகம், 3 பணியாளர் அறைகள் மற்றும் கழிவறை; மதுரை –ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 96 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் விடுதிக் கட்டடம்; கீழக்குயில்குடி –அண்ணா பல்கலைக்கழக மண்டலவளாகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதி; திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்–எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் 2 கழிவறை தொகுதிகள்; நிலக்கோட்டை–அரசுமகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகம்; தேனி மாவட்டம், வீரப்பாண்டி–அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 86 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 கூடுதல் வகுப்பறைகள்; விருதுநகர் மாவட்டம், சிவகாசி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 19 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 கூடுதல் வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் 3 கழிவறை தொகுதிகள்; சிவகங்கை மாவட்டம், காரைக்குடி–அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பணியாளர்அறை; கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் – அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் 1 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல்வகுப்பறைகள் மற்றும் 2 கழிவறை தொகுதிகள்; தொண்டாமுத்தூர் – அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 97 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டடங்கள்; கோயம்புத்தூர் –கொடிசியா சாலையில் அமைந்துள்ள மண்டல அறிவியல் மைய வளாகத்தில் 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர்களின் புத்தாக்கத்திறனைமேம்படுத்த தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் ஆய்வக வசதிகளுடன் கூடிய புத்தாக்கமையம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில்அமைந்துள்ள அண்ணா அறிவியல் மைய வளாகத்தில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர்களின் புத்தாக்கத்திறனைமேம்படுத்த தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் ஆய்வக வசதிகளுடன் கூடிய புத்தாக்கமையம்; திருப்பூர் மாவட்டம், பல்லடம் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் 4 கழிவறைகள்; திருப்பூர் –சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 35 இலட்சம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 கூடுதல் வகுப்பறைகள், பணியாளர் அறைகள்மற்றும் கழிவறைகள்; திருப்பூர் – எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 70 இலட்சம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறைகள், பணியாளர் அறை மற்றும்கழிவறை; சேலம் மாவட்டம், எடப்பாடி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள், கழிவறைகள் மற்றும் இதரக் கட்டடங்கள்; நீலகிரி மாவட்டம், கூடலூர் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 வகுப்பறைகள் மற்றும் 4 கழிவறை தொகுதிகள்; பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை – அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் 2 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகங்கள்; கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் – திரு.கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள்; கூடுவெளி– அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டடங்கள்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் – அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 89 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகம்; கும்பகோணம், அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே
50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 கூடுதல் வகுப்பறைகள் மற்றும்கூட்டரங்கம்; கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் – அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் 2 கோடியே 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 கூடுதல் வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் 4 கழிவறை தொகுதிகள்; திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி – இராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 3 கோடியே 57 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள், கழிவறை மற்றும் மகளிர் விடுதிக் கட்டடம்; திருநெல்வேலி –கோவிந்தபேரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 20 இலட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள், 1 ஆய்வகம், கழிவறைதொகுதிகள் மற்றும் இதரக் கட்டடங்கள்; தென்காசி மாவட்டம், சுரண்டை –காமராஜர் அரசு கலைக் கல்லூரியில 1 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் மற்றும் இதரக் கட்டடங்கள்; என மொத்தம் 102 கோடியே 94 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., தொழில்நுட்ப கல்வி இயக்குநர் திருமதி க.லட்சுமி பிரியா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.