முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.11.2021) சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர் போன்ற பகுதிகளில்கடுமையான மழையின் காரணமாக ஆங்காங்கு தண்ணீர  ேங்கியிருக்கக்கூடிய நிலைஉருவாகியிருக்கிறது. எனவே, அப்பகுதிகளையெல்லாம் நான் பார்வையிட்டு பாதிக்கப்பட்டமக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்குவதற்கான உத்தரவினை நான்பிறப்பித்திருக்கிறேன்இந்த பார்வையிடக்கூடிய நிகழ்வில், நம்முடைய மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறைஅமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத  ுறைஅமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள், தலைமைச் செயலாளர், பெருநகர சென்னைமாநகராட்சி ஆணையர் மற்றும  அதிகாரிகளோடு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டஇடங்களையெல்லாம் நாங்கள் பார்த்திருக்கிறோம். தொடர்ந்து, இன்று மாலை தென்சென்னை பகுதியில் இதேபோன்று ஒரு ஆய்வை நான் மேற்கொள்ளவிருக்கிறேன்.

மக்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைந்துமேற்கொள்ள, குடியிருப்புப் பகுதியில் தேங்கியிருக்கக்கூடிய நீரை வெளியேற்ற தேவையானநடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிப்பட்டிருக்கிறது. சென்னை நகரில் மீட்புப்பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்தவர்களும், காவல் துறை, தீயணைப்புத் துறையைச் சேர்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து மூழு வீச்சில் அந்தப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில  அனைத்து அலுவலர்களும் இரவு, பகல் பாராமல் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கனமழையினைத் தொடர்ந்து மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் நான்கு தேசியபேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டிருக்கிறதுதற்போது, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது.இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழைபெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் குறிப்பாக 24 மணி நேரத்தில் 20 செ.மீட்டருக்குமேல் மழை பெய்திருக்கிறது. இது அதிகனமழையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மாநகராட்சி மூலமாக இராட்சசபம்புகளை வைத்து நீர் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது.  சுமார் 500 இடங்களில் இந்தபம்புகள் பொருத்தப்பட்டு நாம் அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

நிவாரண முகாம்கள் தொடங்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையானபாதுகாப்புக்குரிய இடமும் அதைத் தொடர்ந்து உணவு, மருத்துவ வசதியும் செய்துதரப்படுகிறது. சென்னையில் 160 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.இதுவரை 44 மையங்கள் துவக்கப்பட்டு அந்த முகாம்களில் மக்கள தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களுக்கு உணவு தொடர்ந்து வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சென்னை மாநகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை சுமார் 50,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பணி தொடந்து நடைபெறவேண்டும் என்று நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங் அரச அதிகாரிகள் மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றஉறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளில்தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடியவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து அந்தப் பணியை நிறைவேற்றவேண்டும் என்று நான் அறிவுரையாக சொல்லியிருக்கிறேன்மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த இரு தினங்களுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறதுவெளியூர்களிலிருந்து சென்னை திரும்பக்கூடியவர்கள் தங்கள் பயணத்தை இன்னும்இரண்டு, மூன்று நாட்கள் தள்ளிவைத்து அதற்குப் பிறகு நீங்கள் பயணத்தை மேற்கொள்ளவேண்டுமென்று நான் அவர்களையெல்லாம் உங்கள் மூலமாக கேட்டுக் கொள்கிறேன்.

மாநிலத்தைப் பொறுத்தவரை, சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அதாவது, கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, நாமக்கல், இராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரங்களில் 20 மி.மீட்டருக்குமேல் மழை பெய்திருக்கிறது. ஏனைய மாவட்டங்களில் இதுவரை அதிக மழைப்பொழிவுஇல்லை. இருப்பினும், அரசு அலுவலர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்கிறார்கள்பொதுமக்கள் அரசின் உதவி தேவைப்படும் நேரங்களில், அவர்களுக்கு உதவுவதற்காகமாநில கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக்கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள வேண்டுமென்று சொன்னால்,  1070 என்றதொலைபேசி எண்ணை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மழையினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மின்கம்பங்கள், குழிகள் போன்றவற்றை மிகவிரைவாக சரிசெய்ய மின் துறைக்கும், அதேபோல உள்ளாட்சித் துறைக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் நான் அறிவுறுத்தியிருக்கிறேன். எனினும், நான் பொதுமக்களை அன்போடுகேட்டுக்கொள்ள விரும்புவது, தண்ணீர் சூழ்ந்திருக்கக்கூடிய இடங்களில் மிகவும்எச்சரிக்கையாக நீங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை இந்தநேரத்தில் நான் எடுத்து வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கேள்விவானிலை முன்னறிவிப்பு சொல்லக்கூடிய சென்னை மற்றும் காரைக்காலில் உள்ளரேடார்கள  ெயல்பவில்லை என்ற ஒரு தகவல் வந்திருக்கிறது, இது குறித்துசம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவீர்களா?

முதலமைச்சர் பதில்தவறான தகவலை தகவல் என்று சொல்லி நீங்களேசொல்கிறீர்கள். அந்த மாதிரி தவறான தகவல் வந்திருக்கிறதென்று நீங்களே சொல்கிறீர்கள்.அரசியல் நோக்கத்தோடு சொல்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்கிறஅவசியம் இல்லை.  அவர்களது ஆட்சிக்காலத்தில், எப்படி செம்பரம்பாக்கம் ஏரிய ிறந்துவிட்டார்கள் என்பது ஒரு கதை.  நான் அதையெல்லாம் இப்போது சொல்லிஅரசியலாக்க விரும்பவில்லை. முன்கூட்டியே எப்போது தகவல் வந்ததோ அந்தக் தகவலின்அடிப்படையில், தொடர்ந்து என்னுடைய தலைமையிலும் அதிகாரிகளைக் அழைத்துப்பேசியிருக்கிறேன். அதேபோல, தலைமைச் செயலாளர  அவ்வப்போது அதிகாரிகளைஅழைத்துத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  நேற்றைக்குக்கூட, எந்தந்தமாவட்டங்கள் பாதிப்புக்கு ஆளாகும் என்பது தெரிந்து அந்த மாவட்டத்தின் ஆட்சித்தலைவரிடத்தில் ஒரு பெரிய கூட்டத்தை நடத்தி காணொலிக் காட்சி மூலமாக அவர்களுடையகருத்துக்களைக் கேட்டு,  என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றுஎல்லாம் நேற்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கேள்விஇந்த மழை காரணமாக இதற்கு முன்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த வெள்ளத்தடுப்புப் பணிகளில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் என்று கருதுகிறீர்களா?

முதலமைச்சர் பதில் –  மழை  சீசன் எப்போது வரும் என்பது முன்கூட்டியேதெரியும்.   நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடேனேயே, அப்போதே மழைநீர் வடிகால்களைசுத்தப்படுத்தியிருக்கிறோம். அதே போல தூர் எடுத்திருக்கிறோம். டெல்டா பகுதிகளில்கரைகளையெல்லாம் எப்படி சுத்தப்படுத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே,  ுன்கூட்டியே இந்த ஆட்சியில் அனைத்தையும் தயாராக வைத்திருக்கிறோம்.

கேள்விஏரிகளின் நீர் வரத்து எப்படியிருக்கிறது? செம்பரம்பாக்கம் ஏரியில்….

முதலமைச்சர் பதில் – 24 மணி நேரமும் அங்க  உரிய அதிகாரிகள்நியமிக்கப்பட்டு, அவர்கள் அவ்வப்போது செய்தியை சொல்லிக் கொண்டிருக்கிறார்க்ள். தேவைப்படும் நேரங்களில் தண்ணீரை திறந்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கேள்விவடிகால் அமைப்பதற்கு முன்னாலேயே நாம் நடவடிக்கை எடுத்தோம், ஆனால்இப்போது மழை பெய்யும்போது நிறைய தண்ணீர் தேங்கியிருப்பதை பார்க்க முடிகிறதே

முதலமைச்சர் பதில்அதாவது குறுகிய காலத்தில் பெரிய மழை பெய்திருக்கிறது.அதனால்தான் இவ்வளவு பெரிய அளவில் தண்ணீர் தேங்கியிருக்கக் கூடி  ூழல்ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக, உறுதியாக இவையெல்லாவற்றையும் கண்காணித்து உரியநடவடிக்கை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி –  ாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவாய்ப்பிருக்கிறதா?

முதலமைச்சர் பதில்ஏற்கனவே நியமிக்கப்பட்டு அதிகாரிகள் அந்தந்தபணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கேள்விபாதாள சாக்கடை திட்டங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து….

முதலமைச்சர் பதில்அதில் என்ன குறை இருந்தாலும்,  ிறைவு செய்யப்படும். கடந்த கால ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை, 10 வருடங்களாக ஒன்றுமே செய்யவில்லை.தனால் இப்போது நாங்கள் வந்ததற்குப்பின்தான் எல்லாம் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். அதில் ஒரு 50 சதவீதம் நாங்கள் செய்ததில் எங்களுக்கு திருப்தி, மீதம் 50 சதவீதம் செய்யவேண்டியிருக்கிறது. அதைக் கண்டிப்பாக, மழை முடிந்ததற்குப் பின்பு அந்தப் பணிகளைநிறைவேற்றுவோம்.