முதலமைச்சர், திமுக கழகத் தலைவர் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், 17.11.2021அன்று மாலை, சென்னை கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட தலைவரும் – அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான ஆர்.எம்.டி.ரவீந்திரன் – வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட தலைவர் சீமாபஷீர்,Ex.M.C., சிறுபான்மை பிரிவு பகுதிச் செயலாளர் மொகரம் – வழக்கறிஞர் அணிச் செயலாளர் டி.டீக்ராஜ் துணைச்செயலாளர் ஆர்.சுரேஷ் – துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற பகுதிச் செயலாளர் ஏ.ஜோசப், மேலவை பிரதிநிதி டி.ரவிஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். அதுபோது அமைச்சரும் – சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான பி.கே.சேகர்பாபு, வடசென்னை மாவட்டப் பொறுப்பாளர் தா.இளையஅருணா, வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராச்சாமி, இராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.