எஸ்.ஜெகநாதன் தயாரிப்பில் ”டப்பாங்குத்து”

மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி வழங்கும் எஸ்.ஜெகநாதன் தயாரிப்பில் மதுரை மண்ணின் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் புதிய திரைப்படம் ”டப்பாங்குத்து”. இத்திரைப்படத்தில் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு மூலம் கதாநாயகனாக அறிமுகபடுத்தப்பட்ட சங்கரபாண்டி கதாநாயகனாக நடிக்க, தீப்தி கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் இவர்களுடன் காதல் சுகுமார், ஆன்ரூஸ், துர்கா,விஜய் கணேஷ், ரோபோ சந்துரு, மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் பறவை முனியம்மா, கரிசல் கருணாநிதி, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், கிடாக்குழி மாரியம்மா, ஆக்காட்டி ஆறுமுகம், செந்தில் ராஜலட்சுமி, என நாட்டுப்புற கலைஞர்களின் பட்டிதொட்டி யெங்கும் பட்டய கிளப்பிய பாடல்கள் இத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. குணசேகரனின் கதை திரைக்கதை வசனத்தில், முத்துவீராவின் இயக்கத்தில் மதுரை மண்ணின் மணம் மாறாமல் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது*********

மதுரையை சேர்ந்த பாண்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஆட்டக்காரன்.அவன் தன் குழுவினருடன் சேர்ந்து மதுரையை சுற்றி உள்ள ஊர்களுக்குச் சென்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறான். அவனுடைய தாய் மாமன் தர்மலிங்கம், கலை நிகழ்ச்சிகளுக்கு நாடக நடிகர்களை கொடுக்கும் ஒரு முகவராக இருக்கிறார்.  அதே ஊரை சேர்ந்த தனம் பாண்டியோட கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று ஆடுவதற்கு முடிவு செய்கிறாள். ஆனால் தர்மலிங்கமா தனத்தை பாண்டியின் குழுவில் சேர்ந்து ஆடக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறான். இதனால் பாண்டிக்கும் தர்மலிங்கத்திற்கும் மோதல் ஏற்படுகிறது தர்மலிங்கம் ஏன் தனத்தை ஆடக்கூடாது என்று சொல்கிறான், தனத்திற்கு பின்னணி என்ன?ஏன் தர்மலிங்கம் அவளை ஆடக்கூடாது என்று கூறுகிறான்.. தனம் பாண்டியோட மேடை ஏறினாளா இவைகளை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல்கள் அனைத்தையும் தீனா மாஸ்டர் பிரமாண்டமாக நடனம் அமைத்துள்ளார்.. தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு சிறப்பாக வந்துள்ளது.. இப்படத்தின் கலையை சிவாயாதவ் கவனிக்க, ஒளிப்பதிவை ராஜா கே பக்தவச்சலம் கவனிக்க, சரவணனின் இசையில்,. சென்சார் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு  ‘U’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம்  இம்மாதம் நவம்பர் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது.

தொழில் நுட்ப கலைஞர்கள்  இயக்கம் –  முத்துவீரா கதை திரைக்கதை வசனம் – STகுணசேகரன் ஒளிப்பதிவு – ராஜா கே பக்தவச்சலம்  இசை – சரவணன் நடனம் – தீனா மாஸ்டர்  சண்டை பயிற்சி  – ஆக்க்ஷன் பிரகாஷ் மக்கள் தொடர்பு – செல்வரகு எஸ்  தயாரிப்பு – Modern Digitech Media LLP