“ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்” திரைப்பட விமர்சனம்

கேப்டன் எம்.பி.ஆனந்த் தயாரிப்பில் பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத், அபிராமி, தலைவாசல் விஜய், ராஜாஜி, கனிகா, ஷான், கல்கி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர், பி.ஜி.எஸ்., அரோல் டி.சங்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்”. துப்புரவு தொழிலாளியான அமிராமிக்கு ஒர் கைத்துப்பாக்கி கிடைக்கிறது. அவரது 18 வயது மகன் திருநங்கையாக மாறிவிடுகிறான். திருநங்கையை டாக்டருக்கு படிக்க வைக்க பலரிடம் கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறாள். பிறகு அபிராமி என்ன ஆனால் என்பது ஒரு கதை. அனாதையான பரத் ஒரு பணக்கார கிறிஸ்துவ பெண்ணை காதலித்து அவளின் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார். அந்த பெண்ணுக்கு இரண்டு கிட்னிகளும் செயல் இழந்து விடுகிறது. அவளை காப்பாற்ற மருத்துவமனைக்கு ரூ.15 லட்சம் கட்ட வேண்டும். அந்த பணத்தை பரத் எப்படி பெறுகிறார் என்பது இன்னொரு கதை. அஞ்சலி நாயர் திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்கிறார். கணவர் மாமனார் மாமியாருடன் சந்தோஷ்மாக வாழ்கிறார்.  ஆனால் கணவருடன் உடல்யுறவு வைக்காமல் தனக்கும் தெரியாமல் கர்பமாகிவிடுகிறார். தனக்கே தெரியாமல் எப்படி கர்ப்பமானார் என்பது வேரொரு கதை. ஜாதி வெறி பிடித்த தலைவாசல் விஜய்,  தனது மகள் வேறு ஜாதி பையனை காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்து வேகமாக காரில்  அங்கு செல்லும்போது, சாலையோரத்தில் காருக்காக நிற்கும் ஒரு பையனை தன் காரில் ஏற்றிக் கொண்டு செல்கிறார். அந்தப் பையன்தான் தன் மகளை திருமணம் செய்யப்போகும் வேறு சாதிப் பையன் என்று நினைத்து அவனை சுட்டுக் கொன்றுவிட்டு பதிவுத்துறை அலுவலகத்துக்கு செல்கிறார். அங்கு தனது மகள் வேரொரு பையனுக்கு மாலைமாற்றிக் கொண்டிருக்கிறாள். அப்படியானால் தலைவாசல் விஜய் சுட்டுக் கொன்ற அந்த பையன் யார்? இப்படி நான்கு விதமான கதைகளை உச்சக் கட்ட காட்சியில் ஒன்றினைக்கிறார் இயக்குநர் பிரசாத் முருகன். இந்த நான்கு கதைகளும் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சீர்திருத்தக்கருத்துக்களை அச்சமின்றி துணிச்சலுடன் பதிவு செய்திருக்கிறார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கோபத்தின் உச்சத்தை நியாயப்படுத்திருக்கிறார். நீதிபதியின் கையிலிருக்கும் சுத்தியலை பாதிக்கப்பட்டவர்களின் கையில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரசாத் முருகன். வாழ்த்துக்கள்.