மனதை இலகுவாக்கும் திரைப்படம் “யோலோ”

எம்.ஆர்.மோசன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,  எஸ்.சாம் இயக்கத்தில்,  புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக  நடிக்க, மனதை இலகுவாக்கும் காதல் நகைச்சுவையுடன் கலகலப்பான வணிக ரீதியாக  பொழுதுபோக்கு படமாக  உருவாகும் “யோலோ” திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, நடைபெற்றது. வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில்,படம் உருவாக்கப்படுகிறது. இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.சாம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.********

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் பூஜையில் இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், திலீப் குமார், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா, விக்னேஷ், லக்‌ஷ்மி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

தொழில் நுட்ப குழு: தயாரிப்பு நிறுவனம் – MR Motion Pictures தயாரிப்பு – மகேஷ் செல்வராஜ்  இயக்கம் – S. சாம் ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி இசை – சகிஷ்னா சேவியர் எடிட்டிங் – A L ரமேஷ் கலை இயக்கம் – சம்பத் திலக் கதை – ராம்ஸ் முருகன் ஸ்டண்ட் – டேஞ்சர் மணி நடனம் – கலைக்குமார் திரைக்கதை – S. சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன் பாடல்கள் – முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஸ்காந்த் உடைகள் – நட்ராஜ் உடை வடிவமைப்பு – மீனாட்சி ஸ்ரீதரன் ஸ்டில்ஸ் – மணியன் தயாரிப்பு நிர்வாகி -புதுக்கோட்டை M. நாகு விளம்பர வடிவமைப்பு – வியாகி மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )