தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும்முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா – கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில்வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர்அவர்களின் திருவுருவப் படத்திறப்பு விழா – ஆகிய விழாக்களுக்குத் தலைமை விருந்தினராக வருகைபுரிந்து விழாப் பேருரை ஆற்றவிருக்கின்றமாண்புமிகு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத்கோவிந்த் அவர்களே!

விழாவுக்குத் தலைமை வகித்து தலைமையுரைஆற்றவிருக்கக்கூடிய மாண்புமிகு தமிழ்நாடுஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களே!சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதியரசர்மாண்புமிகு திரு. சஞ்சிப் பானர்ஜி அவர்களேதொடக்கத்தில் அனைவரையும் வரவேற்றுஉரையாற்றிய மாண்புமிகு பேரவைத் தலைவர் திருமுஅப்பாவு அவர்களே! மாண்புமிகு அவைமுன்னவர் அவர்களேமாண்புமிகு அமைச்சர்பெருமக்களே!  நன்றியுரை ஆற்றவிருக்கின்றமாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்  திரு. குபிச்சாண்டி அவர்களே! தலைமைச்செயலாளர் அவர்களே!

மாண்புமிகு நாடாளுமன்றசட்டமன்றஉறுப்பினர்களே! சிறப்பு அழைப்பாளர்களேபல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்களேமுக்கியப் பிரமுகர்களேசட்டமன்றப் பேரவைச்செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களேஅரசு ஊழியர்களேபத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களேஉங்கள் அனைவருக்கும் எனதுநெஞ்சார்ந்த வணக்கத்தை முதலில் தெரிவித்துக்கொள் விரும்புகிறேன்.

வரலாற்றில் பொன்னெழுத்துக்களால்பொறிக்கத்தக்க நாளாக இந்த ஆகஸ்ட் 2-ஆம் நாள் இனி வரும் காலங்களில் சிறப்புப்பெறவிருக்கிறது என்பதை நான் பெருமிதத்துடன்குறிப்பிட விரும்புகிறேன்.  தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல – இந்தியவரலாற்றிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கும் புனிதஜார்ஜ் கோட்டைக்கு நம்முடைய குடியரசுத்தலைவர் அவர்கள் இன்றைக்கு வருகைபுரிந்திருக்கிறார்கள்நம்முடைய குடியரசுத் தலைவர் அவர்களைப்பொறுத்தவரையில்பட்டியலின மற்றும்பழங்குடியின மக்களின் நலனை முன்னிறுத்திவாதாடுவதில்போராடுவதில் தன்னைஅர்ப்பணித்துக் கொண்டவர்இந்திய ஆட்சிப் பணிகிடைத்தும்அதனை ஏற்காமல்வழக்கறிஞராகப்பணியாற்றியவர்சமூகநீதியைத் தனது வாழ்வின்இலக்காகக் கொண்டவர்இத்தனைப்பெருமைகளுக்குரிய அவர்இன்றைக்கு நம்முடையதமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகை தந்திருப்பதுநாமெல்லாம் பெருமைப்படத்தக்க ஒன்றாகும்பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டஇந்தச் சட்டமன்றம்கடந்த ஒரு நூற்றாண்டில் பலபுதுமையான சட்டங்களைமுன்னோடித்திட்டங்களை உருவாக்கிசமதர்ம சமூகத்தைப்படைத்திட வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது1919-ஆம் ஆண்டில் ‘மாண்டேகு – செம்ஸ்போர்டு’ சீர்திருத்தங்களின் அடிப்படையில்இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தின்மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்அந்நாளைய மாகாண சட்டமன்றங்களில்முதன்முதலில் இடம்பெறத் தொடங்கினர்அச்சட்டமே பின்னர் மாகாணங்களில்தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் உருவாவதற்குவழிகோலியது.  அந்தச் சட்டத்தின்படிசென்னைமாகாண சட்டமன்றத்துக்கு 1920-ஆம் ஆண்டுமுதன்முதலாகத் தேர்தல் நடந்ததுஅந்தத்தேர்தலில் திராவிட இயக்கத்தின் தலைமகனானநீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பில்அமர்ந்தது1921-ஆம் ஆண்டு கன்னாட் கோமகன்அவர்களால் முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம்தொடங்கி வைக்கப்பட்டதன் பவளவிழாநிகழ்ச்சியும்அதேபோல 1935-ஆம் ஆண்டு இந்தியஅரசுச் சட்டத்தின் கீழ் முதன்முதலாக 1937-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஏற்படுத்தப்பட்டசென்னை சட்டமன்றப் பேரவையின் வைரவிழாநிகழ்ச்சியும், 1997-ஆம் ஆண்டு அப்போதையமுதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர்கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடுஅரசால் சிறப்புடன் கொண்டாடப்பட்டதைநூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற இந்தவேளையில் நான் நினைவுகூர விரும்புகிறேன்அதே வேளையில்இந்தப் பெருமைமிகுசட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த ஒரு சில சட்டங்களை எடுத்துச்சொல்லவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயேமகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்தைமுதன்முதலாக நிறைவேற்றிய பெருமை சென்னைமாகாணச் சட்டமன்றத்திற்கு உண்டு.  அதோடுதேவதாசி ஒழிப்புச் சட்டம்மகளிருக்குஉள்ளாட்சிப் பதவிகளில் உரிய இடஒதுக்கீடுபெண் குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டம்என மகளிர் நலன் காப்பதில் நாட்டிற்கேமுன்னோடித் திட்டங்களை உருவாக்கித் தந்தபெருமை கொண்டதுஅதுமட்டுமல்ல –பேரறிஞர் அண்ணாஅவர்கள் சென்னை மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததனித் தீர்மானம் நிறைவேற்றியதுசுயமரியாதைமற்றும் சீர்திருத்த திருமணத்தைச்செல்லுபடியாக்கிடச் சட்டம் வகுத்தது; நிலச்சீர்திருத்தச் சட்டம் உருவாக்கியது; மே தினத்தைஅரசு விடுமுறை ஆக்கிட வழிவகுத்தது; மாநிலசுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றியது;பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கிடசட்டம் கண்டது; டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அமைத்திட சட்டம்நிறைவேற்றியது; தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நிறைவேற்றியது . என பார் போற்றும் பல்வேறு சட்டங்களைதீர்மானங்களை நிறைவேற்றிய பெருமை இந்தச்சட்டமன்றத்திற்கு உண்டு.  சீர்மிகு இந்தச்சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் இன்றைக்குநாமெல்லாம் பங்கேற்றுள்ளோம் என்பதே நாம்எண்ணிப் பெருமிதம் கொள்ள வேண்டியஒன்றாகும்.  தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைநிலைநாட்டப்பட்ட மாபெரும் வளாகம் இது.  அரசுமுத்திரையில் “வாய்மையே வெல்லும்’’ எனத்தமிழ்மொழி அரியணையில் அமர்ந்துஅலங்கரிப்பதையும் கண்டு மகிழ்கிறோம் நாம்மாற்றுத்திறனாளிகள்திருநங்கையர்ஏழைஎளியவர் என விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கஇந்தச் சட்டமன்றம் தொடர்ந்து செயலாற்றிவருகின்றது. நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்தச்சட்டமன்றத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாகதனது ஜனநாயகக் கடமையை செம்மையாகநிறைவேற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைநினைவுகூர்ந்துஅவரது திருவுருவப் படத்தைத்திறந்து வைத்திருப்பது அனைத்திற்கும்முத்தாய்ப்பானதாகும்.  

1957-ஆம் ஆண்டு இந்த மன்றத்திற்குமுதன்முதலாகத  ேர்ந்தெடுக்கப்பட்டபோதுதனது கன்னிப்பேச்சில் நங்கவரம் உழவர்கள்பிரச்சினை குறித்துப் பேசிஅனைவரதுகவனத்தையும் ஈர்த்து முத்திரை பதித்தவர் கலைஞர்அவர்கள்முதலமைச்சராகஎதிர்க்கட்சித்தலைவராகஅமைச்சராகஉறுப்பினராகப்பல்வேறு பொறுப்புகளில் மக்கள் பணியாற்றிபலரது பாராட்டுகளையும்அன்பையும் பெற்றவர்முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்சமூகநீதிக்கு அடித்தளம் அமைத்த மண்டல்ஆணைய அறிக்கையைச் செயல்படுத்த தீர்மானம்,தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையைநிலைநாட்ட காவிரி நடுவர் மன்றத்தை அமைக்கக்கோரும் தீர்மானம், தந்தை பெரியாரின் நெஞ்சில்தைத்த முள்ளை நீக்கிடஅனைத்துச் சாதியினரும்அர்ச்சகராகலாம் என்ற சட்டம், மாணவர்கள்உயர்கல்வி பெறுவதில் இருந்த இடர்களை நீக்கநுழைவுத் தேர்வை ஒழிக்கும் சட்டம் போன்றபல்வேறு புரட்சிகர – சீர்திருத்தத்தீர்மானங்களையும்சட்டங்களையும் இயற்றிதமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தலைவர்கலைஞர் அவர்களைஅவரது 50 ஆண்டுகாலசட்டமன்றப் பணிகளைப் பாராட்டி நடைபெற்றபொன்விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றியபொதுவுடைமைப் போராளியும்முன்னாள்மக்களவைத் தலைவருமான திருசோம்நாத்சாட்டர்ஜி அவர்கள்,  “கொள்கைகளுக்காகவும்இலட்சியங்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுஅதற்குத் தீங்கு வரும்போது எந்தத்தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தவர்கலைஞர்” – என்று பாராட்டிப் பேசியதை நினைத்துப்பார்க்கும்போதுமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்இந்தியத் துணைக் கண்டத்தில் எத்தகையதொருமாபெரும் தலைவராக விளங்கினார் என்பதுதெள்ளத் தெளிவாக விளங்கும்.   

உடன்பிறப்பே! உன் இயல்பு என்மீது அன்பைப்பொழிவதுஎன் இயல்பு உன் அன்புக்குக் கட்டுப்படுவது!நம் இயல்பு கழகத்தைக் கட்டிக் காப்பது!’ – என்று தனது காந்தக் குரலால் தமிழ்நாட்டுமக்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்அவரது திருவுருவப் படத்தைப் பார்க்கும்போது – சர் பிட்டி தியாகராயர் – டி.எம். நாயர் – டாக்டர்நடேசனார் தொடங்கி இனமானப் பேராசிரியர்வரையிலான பல மாபெரும் தலைவர்களின்முகங்களை நான் காண்கிறேன்முன்னாள் முதலமைச்சரான அவரது திருவுருவப்படத்தைப் பார்க்கும்போதுஇன்றும் நம் முன்னால்இருந்து வழிநடத்தும் ஒரு முதலமைச்சராகஅவரைக் காண்கிறேன்.   இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத்தலைவர் அவர்கள்,  தமிழன்னையின்தலைமகனான கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்ததை எண்ணிதமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன் – கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்.

I take this opportunity to thank our Honourable President for gracing this house with his presence and making this historic event more special. 

I also like to express my sincere gratitude to our Honourable Governor of Tamil Nadu for presiding over.

ஜனநாயக மாண்பைக் காக்கும் தமிழ்நாடு சட்டமன்றம் இன்னும் பல நூற்றாண்டு விழாக்களைக் கண்டுஅடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறுசட்டங்களை இயற்ற வேண்டும் எனவாழ்த்துகிறேன்

நன்றிவணக்கம்!