முனிவேலன் தயாரிப்பில் ஹாரூன் இயக்கத்தில் நட்டி நடராஜ், ஷில்பா மன்சுநாத், மொட்ட ராஜேந்திரன்ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “வெப்“. நட்டி நடராஜ் நான்கு இளம் பெண்களை கடத்திஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தனி வீட்டில் கட்டிவைத்து கொடூரமாக அடித்தும் ஒரு பெண்ணைகட்டந்துண்டமாக வெட்டி கொலையும் செய்கிறார். துன்புறுத்துததில் இன்பம் காணும் கொடூர குணம்கொண்ட வில்லன் எப்படி கதாநாயகனாக மாறுகிறார் என்பதுதான் கதை. கடத்தப்பட்ட இளம் பெண்கள்யார்? என்பதை வெள்ளித்திரை விளக்குகிறது. உச்சக்கட்ட காட்சிவரை நட்டி நடராஜ் வில்லனாகவேகதை முடிந்திருந்தால் நிச்சையமாக இளம் பெண்கள் கையால் அடிவாங்கியிருப்பார். அவ்வளவுகொடூரமாக அவரின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. உச்சக்கட்ட காட்சியில் கதாநாயகனாக வரும்போதுவெள்ளித்திரையில் மிளிர்கிறார். தற்காலத்து இளம் மென்பொறியாளர்களின் மோசமானபழக்கவழக்களையும் அவற்றிலிருந்து அவர்கள் விடுபடும் வழிமுறையும் திரையில் சித்தரித்திருக்கும்இயக்குநர் ஹாரூன் பாராட்டுதலுக்குரியவர். கார்த்திக் ராஜாவின் இசை காட்சிகளோடு ஒன்றினைந்துபடத்திற்கு வலு சேர்க்கிறது.