பாஜக ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த சில வாரங்களாக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் எனத் தொடங்கி நடத்தி வரும் சோதனை தாக்குதல் அவரது அதிகாரப்பூர்வமான அரசுஇல்லத்திலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கும் சென்றுள்ளது. “எந்தவிசாரணைக்கும் ஒத்துழைக்க தயார்” என அவர் அறிவித்த நிலையிலும் சட்ட முறைகளை நிராகரித்து, மனித உரிமைகளை அலட்சியப்படுத்திய அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் அவரது உடல்நிலைகடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு நெட்டித் தள்ளப்பட்டுள்ளது. அமைச்சர், உயிருக்கு போராடி வரும் நிலையில் அவரது சட்டபூர்வ கடமைகளை கவனிக்கும் பொறுப்பைஅமைச்சரவை உறுப்பினர்களிடம் முதலமைச்சர் பிரித்து வழங்கியுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சிமுறையில் முதலமைச்சர் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் சட்டப்படியானகடமைப் பொறுப்பாகும். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு எதிராகஅரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் வன்மத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போதுதமிழ்நாடு மக்களை தவறாக வழிநடத்தும் உள்நோக்கம் கொண்ட குறிப்புகளுடன் முதலமைச்சர்கடிதத்தை திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநரின் அப்பட்டமான அதிகார அத்துமீறலையும், மலிவானஅரசியல் நடவடிக்கையையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுவன்மையாகக் கண்டிக்கிறது. திரு.ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் + பாஜக ஆதரவு அரசியலை ஆளுநர்மாளிகையில் இருந்து நடத்துவதை தமிழ்நாடு வினாடிப் பொழுதும் அனுமதிக்காது என்பதை உணரவேண்டும் என எச்சரிக்கை செய்கிறது.