“புஷ்பா 2” திரைப்பட விமர்சனம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராவ் ரமேஷ், சுனில், ராஷ்மிகா மந்தானா, ஶ்ரீ லீலா, அனுசுயா பரத்வாஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும்படம் “புஷ்பா 2”. புஷ்பா ஒன்றில் பகத் பாசிலை அரை நிவாணமாக்கி படத்தை முடித்ஹிருப்பார்கள். அதிலிருந்து பஷ்பா 2 தொடர்கிறது. தென்மாநிலங்களில் செம்மரக்கட்டைகளை கடத்திவந்த அல்லு அர்ஜூன் உலகளவில் கடத்துகிறேன் என்று பஹத் பாசிலிடம் சவால் விடுகிறார். அப்படி கடத்திவிட்டால் போலீஸ் வேலையை விட்டுவிடுகிறேன் என்று பஹத் பாசில் எதிர் சவால் விடுகிறார். இதில் யார் வென்றார்கள் என்பதுதான் “புஷ்பா 2” முக்கிய கதை. “புஷ்பா” வில் அல்லு அர்ஜூனனை அவரது அண்ணன் எதிர்த்துக் கொண்டே இருப்பார். இப்படத்தில் அவரகளது அண்ணன் தம்பி உறவு என்னானது?. “புஷ்பா 3” எதிலிருந்து ஆரம்பமாகும் என்பதுதான் இப்படத்தின் கதை. மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் சலிப்புத் தட்டாமல் படத்தை ஓட்டியிருக்கிறார் இயக்குநர் சுகுமார். திரைக்கதையின் காட்சி அமைப்புகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அபாரம். சண்டைக்காட்சிகளை தொழில் நுட்பத்தை வைத்து விளையாடியிருக்கிறார்கள். ராஷ்மிகா மந்தனாவும் ஶ்ரீ லீலாவும் இரண்டு பாடல்களுக்கு எவ்வளவு கவர்ச்சியை காட்டமுடியுமோ அவ்வளவு கவர்ச்சியை போட்டி போட்டு காட்டியிருக்கிறார்கள். ராஷ்மிகா மந்தனாவுக்கு புஷ்பா ஒன்றில் கொடுத்த முக்கியத்துவத்தைவிட இப்படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பெண் வேடத்தில் அல்லு அர்ஜூனன் ஆடிய காளியாட்டம் இளகிய பெண்களை திரையரங்கில் சாமியாட வைத்துவிடும். அப்படியொரு ஆட்டத்தை அல்லு அர்ஜூன் ஆடி தலையில் மகுடம் சூட்டிக் கொண்டார். அண்ணன் தன் வீட்டுக்கு வந்து சென்றதும் பாசத்தின் பெருக்கால் அல்லு அர்ஜூன் அழும் காட்சி, பார்வையாளர்களின் கண்கள் ஈரமாகிவிடுகிறது. வில்லத்தனத்திற்கும் கைத்தட்ட வைக்கிறார் பஹத் பாசில். வியாபார ரீதிக்கான அனைத்து அம்சங்களும் குவிந்து கிடக்கும் படத்தை இயக்கிய சுகுமார் பாராட்டுக்குறியவர்.