“நாங்கள் எளிய பின்னணி கொண்டவர்கள்” – நடிகர் மணிகண்டன்

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம். இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வெற்றி பெற்றது. இதையொட்டி நடிகர. மணிகண்டன் பேசியதாவது:  “இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்த குறுகிய காலத்திலேயே எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. படம் வெளியான பின்பும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படக்குழுவினர் நாங்கள் அனைவரும் எளிய பின்னணி கொண்டவர்கள். படம் எடுப்பது தனி போராட்டம் என்றாலும் எடுத்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பது பெரிய போராட்டம். அந்த மலை போன்ற போராட்டத்தை பனி போல எளிமையாக ஆக்கி கொடுத்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. எங்களை சரியான விதத்தில் வழி நடத்திய பத்திரிகை தொடர்பாளர் சுரேஷ் சந்திரா சாருக்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றி” என்றார்.*********

நடிகை சான்வே மேக்னா, “என்னுடைய முதல் படத்திற்கே இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருடனும் இன்னும் 100 படங்கள் நடிக்க விரும்புகிறேன். ஹைதரபாத்திலும் சீக்கிரம் படம் வெளியாக இருப்பதை எதிர்பார்த்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தை போல மனைவி வேண்டும் என பலரும் சொல்லியிருந்தார்கள். பணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமில்லை என்பதை இந்தப் படம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, “படம் பார்த்து கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. நக்கலைட்ஸ் குழுவுக்கு நன்றி. எங்கள் முதல் படத்தை இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி”