நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் ‘ஹய் நான்னா‘. படத்தின் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அப்பா–மகளின் அழகான, உணர்ச்சிகரமான பயணத்தை ‘ஹய் நான்னா‘ சித்தரிக்கும் இப்படத்தை ஷௌர்யுவ் இயக்குகிறார். வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிக்கின்றனர். நானியின் மகளாக கியாராகண்ணா நடிக்கிறார்.**********
முதல் பாடலான ‘நிழலியே‘ நானி மற்றும் மிருணால் தாக்கூர் ஜோடிக்கு இடையேயான அருமையான உறவை வெளிப்படுத்தி ‘hi நான்னா‘ திரைப்படத்தின் இனிமையான இசைப் பயணத்தை தொடங்கிவைத்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டின் ஒரு பகுதியாக, இரண்டாம் பாடலான கண்ணாடி கண்ணாடி‘-யை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். “அப்பா–மகள் உறவு என்பது தெய்வீகமானது. நானி நடிக்கும் ‘hi நான்னா‘ படத்தில் இடம்பெற்றிருக்கும்‘கண்ணாடி கண்ணாடி‘ பாடல் அனைத்து தந்தைகள் மற்றும் மகள்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்று தனது கீச்சக பக்கத்தில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தனி ஒருவனாக மகளை அன்புடன் வளர்க்கும் தந்தை மற்றும் அந்த குழந்தைக்கு இடையேயான பந்தத்தைஇந்த பாடல் மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறது. மதன் கார்க்கியின் வரிகள் மனதை தொடுகின்றன. இப்பாடலுக்கு உணர்ச்சித் ததும்ப இசையமைத்துள்ள ஹேஷாம் அப்துல் வஹாப், அதை மிகவும் உயிரோட்டத்துடன் பாடியுள்ளார்.