சென்னை,ஜூலை 3- செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் ரூ.5லடசம் மதிப்பீட்டில் அரசு மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டில் அரசு மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி துவக்கி வைத்தார். தாம்பரம் மாநகராட்சியின் மண்டலத் தலைவர் ஜோசப் அண்ணாதுறை, பல்லாவரம் தெற்குபகுதி செயலாளர் இ.எஸ். பெர்னார்ட் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா ஆர்.கே.நாகராஜன் சிறப்பாக செய்திருந்தார்.
தாம்பரம் மாநகராட்சியில் ரூ.5லட்சத்திற்கு அரசு மருத்துவ காப்பீடு வழங்கல்
