‘தி பாரடைஸ்’ படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

நடிகர் நானி – ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி  எஸ்.எல்.வி. சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தி பாரடைஸ்’  திரைப்படத்திலிருந்து ரா ஸ்டேட்மெண்ட் எனும் பெயரில் பிரத்யேகமான காணொளி துணுக்கு காட்சி  வெளியிடப்பட்டிருக்கிறது. இது கடினமான மற்றும் காவிய வடிவிலான பயணத்தை உறுதியளிக்கிறது. நானி நடிப்பில் வெளியான தசரா திரைப்படம்- அவருடைய திரையுலக பயணத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாக இருந்தது.  அவர் தன்னுடைய சௌகரியமான தளத்திலிருந்து விலகி, ஒரு கரடு முரடான கிராமிய கதாபாத்திரத்திற்கு மாறி இருக்கிறார். திரைப்பட ஆர்வலர்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்காத ஒன்றை தற்போது நானி மீண்டும் வழங்குவதற்கு தயாராக உள்ளார். தமிழ், தெலுங்கு,  இந்தி, ஆங்கிலம் , மற்றும் ஸ்பானிஷ் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ரா ஸ்டேட்மென்ட் எனும் பிரத்யேக வீடியோ பார்வையாளர்களுக்கு  எதிர்பாராததை வழங்குகிறது.******

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ‘ரா ஸ்டேட்மென்ட்’ எனும் பெயரில் பிரத்யேக  வீடியோவை வெளியிட்டனர். அந்த காணொளியின் முதல் காட்சியிலிருந்து ‘ரா – RAW’ என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.‌ சூழல் – மொழி-  கதை – பின்னணி – ஆகியவை கரடு முரடானவை மற்றும் பண்படுத்தப்படாதவை. இந்தக் காட்சி ஒருவகையான மறுப்புடன் தொடங்குகிறது. அசலான உண்மை – அசலான மொழி – ஆகியவை வரவிருக்கும் விசயங்களுக்கான த்வொனியை அமைக்கிறது. ஒரு சக்தி வாய்ந்த குரல் வழியாக இக்கதையின் மையம் குறித்து விவரிக்கப்படுகிறது. அதில், ” வரலாற்றில் எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களை பற்றி எழுதி இருக்கிறார்கள். ஆனால் அதே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு எரிந்த காகங்களின் கதை இது. பல காலமாக நடந்து வரும் சடலங்களின் அழுகைகள் – தாயின் மார்பிலிருந்து பாலில் அல்ல.. ரத்தத்தில் எழுப்பப்பட்ட ஒரு சமூகத்தின் கதை. ஒரு தீப்பொறி பற்ற வைக்கப்பட்டு, முழு சமூகத்தையும் உற்சாகத்தால் நிரப்பியது. ஒரு காலகட்டத்தில் இழிவுபடுத்தப்பட்ட காகங்கள் இப்போது தங்கள் கைகளில் கூரிய வாள்களை வைத்திருக்கின்றன. அந்த காகங்களை ஒன்றிணைத்த ஒரு கலகக்கார இளைஞனின் கதை இது. அந்த இளைஞன் ஒரு தலைவராக மாறிய கதை…” என அந்த குரல் விவரிக்கிறது.‌

தொழில்நுட்பக் குழு :  எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓடெலா  தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி தயாரிப்பு நிறுவனம் : SLV சினிமாஸ் ஒளிப்பதிவு : ஜி கே விஷ்ணு இசை : அனிருத் ரவிச்சந்தர் படத்தொகுப்பு : நவீன் நூலி தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா மக்கள் தொடர்பு :  யுவராஜ்  மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ