Navigator Zone Pvt Ltd வழங்கிய LED டிவி, Automatic Sanitizer Machine மற்றும் Table Automatic Sanitizers ஐ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக Navigator Zone Pvt Ltd நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை பெருநகர காவல்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக LED டிவி, Wall Fix Automatic Sanitizer Machine, Table Automatic Sanitizers களை வழங்க முன்வந்தனர்.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் 11.9.2020 அன்று காலை, காவல் ஆணையரக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மேற்படி Navigator Zone Pvt Ltd நிறுவனம் வழங்கிய 3 LED டிவிக்கள், 15 Wall Fix Automatic Sanitizer Machine மற்றும் 50 Table Automatic Sanitizers களை, மேற்படி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரித்தன்யா சந்திரசேகர் முன்னிலையில் காவல் ஆளிநர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் A.அமல்ராஜ், (தலைமையிடம்), இணை ஆணையாளர் S.மல்லிகா, (தலைமையிடம்) துணை ஆணையாளர்கள் S.விமலா, (நுண்ணறிவுப்பிரிவு), K.ஶ்ரீதர்பாபு (நுண்ணறிவுப்பிரிவு) பெரோஸ்கான் அப்துல்லா, (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் மேற்படி அமைப்பின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.