நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப்படம் விமர்சனம்

நடிகைகளில் உச்ச நட்சத்திர நடிகையாக இருக்கும் நயன்தாரா, தனது வாழ்க்கைப் பயணத்தை ஒரு ஆவணப்படத்தின் மூலமாக ரசிகர்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளார்.  இவருக்கும் விக்னேஷ்சிவனுக்கும் நடந்த திருமண வைபவத்தை வியாபார நோக்கத்தோடு கோலாகலமாக நடத்தி, அதோடு தனது சினிமா வாழ்க்கைப் பயணத்தையும் இணைத்து ஒரு ஆவணப்படமாக தயாரித்து  “நெட்பிளிக்ஸ்” இணையதளத்திற்கு விற்று இருக்கிறார். இந்த ஆவணப் படத்தில் தனது வாழ்க்கைப்பயணத்தை விவரிகிறார். அதில் தனக்கு சாதகமானவற்றையே காட்சிபடுத்தியுள்ளார். கேரள கிறிஸ்துவ பெண்ணான டயானாவை சினிமாவிற்காக “நயன்தாரா” என்ற பெயரை மாற்றியவர் மலையாளப்பட இயக்குநர் சத்தியன். இவர் இயக்கிய ஜெயராம் நடிப்பில் வெளியான ‘மனசினக்கரே’ படம் தான் நயன்தாராவின திரையுலக அறிமுக படமாகும். அந்தப் படத்திலிருந்து “நடிகர் தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ்சிவன் இயக்கிய “நானும் ரவுடிதான்” படம் வரை தனது அனுபவங்களை பாதியை சொல்லியும் மீதியை மறைத்தும் ரசிகர்களுக்கு காட்சிப் படுத்தியிருகிறார். அதாவது ஒரு நாணயத்தின் ‘தலை’ பக்கத்தை மட்டுமே காட்டுகிறார். ‘பூ’ பக்கத்தை பூவென்று ஊதியிருக்கிறார். ஆவணப்படத்தில் இவரின் ஒரு பக்கத்தை பார்த்த ரசிகர்கள் மறுபக்கத்தை அறியாதவர்கள் அல்ல. அது நமக்கு தேவையும் அல்ல. மொத்தத்தில் நயன்தாரா நடிப்பின் நுட்பத்தை மட்டுமல்ல வியாபார நுட்பத்தையும் அறிந்தவர். இதில் குறைகூற ஒன்றுமில்லை. ஒருவருக்கொருவர் தங்களது தேவைகளை பரிமாறிக் கொண்டவர்கள்தான்.********