நீலம் புரடெக்ஷன் சார்பில் பா.ரஞ்சித் தயாரிபில் எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக செல்வன், சாந்தனு பாக்கியராஜ், கீர்த்தி பாண்டியன், குமாரவேல்’ ப்ரித்வி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘புளு ஸ்டார்’. ஒடுக்கப்பட்டோரை தலைநிமிர வைக்கும் படமாக தந்திருக்கிறார்கள். 1990ல் நடக்கும் கதையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அரக்கோணம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட இன்மான அசோக் செல்வன் தலைமையில் ‘புளு ஸ்டார்’ என்ற மட்டை பந்தாட்ட அணியும், சற்றே உயர் இனமான சாந்தனு பாக்கியராஜ் தலைமையில் ‘ஆல்பா பாய்ஸ்’ என்ற மட்டைபந்தாட்ட அணியும் அவ்வப்போது மோதிக் கொள்கிறது. இந்த இரு அணிகளும் ஒன்றாகி ஒரே அணியாக களத்தில் நின்றால்தான் ஆதிக்க அணியை வெல்ல முடியும் என்பதை மட்டை பந்தாட்டத்தின் மூலமாக உணர்த்துகிறார் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார். குனிந்து கிடந்த இனம் நிமிர்கிறது பா.ரஞ்சித்தால். கால் மேல் கால் வைத்து நாற்காலியில் அட்டனக்கால் போட்டுக் கொள்கிறது இராவண குலம். அசோக் செல்வனும் சாந்தனுவும் நடிப்பில் போட்டி போடுகிறார்கள். தமிழ் அ.அழகனின் ஒளிப்பதிவு கிராமத்தின் அழகை ரசிக்க வைக்கிறது.