யோகிபாபு வின் “பொம்மை நாயகி” பிப்ரவரி 3 வெளியீடு.

யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பொம்மை நாயகிஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும்இந்த படம் பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது.  தந்தை மகள் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில்யோகிபாபு, சுபத்ரா, ஹரிஜி என் குமார்,  அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி,  நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின்மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார்எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதைஎதிர்கொள்ளும் தகப்பனின்  உணர்வுப்பூர்வமான கதைதான் பொம்மை நாயகி.***************

யோகிபாபு இந்த படத்தில் தனது தனித்தன்மையான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். கடலூர் மற்றும்சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. பிப்ரவரி 3 ம் தேதி தியேட்டரில்வெளியாகவிருக்கும் படம் யோகிபாபுவின் சிறந்த படங்களில் ஒன்றாகவும்  இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

ஒளிப்பதிவுஅதிசயராஜ்,  இசைசுந்தரமூர்த்தி எடிட்டிங்செல்வா RK கலைஜெயரகு பாடல்கள் –  கபிலன், இளையகம்பன், ஜெயமூர்த்தி,  அறிவுஸ்டண்ட்ஸ்டன்னர் சாம்உடைகள்ஏகாம்பரம்