நடந்து முடிந்த நீட் தேர்வில் மெகா மோசடி” : மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வருகிறது. இதைத் தொடா்ந்து நீட் தோவால் தமிழக மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மாணவா்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்டும் நீட் தோவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கை சமா்ப்பித்து. இந்தச் சூழலில் தமிழகத்தில் இந்தாண்டு நீட் தேர்வு நடைபெறுமா என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில் செப்டம்பா் 12ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. ஆனால் நடந்துமுடிந்த தேர்வில் ஆள்மாறாட்டம், முன்கூட்டியே வினாத்தாள் வெளியானது போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதி நடந்துமுடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்துமுடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். பயிற்சி மையங்களில் முன்கூட்டியே நீட் தேர்வு வினாத்தாளை வழங்கி முறைகேடு நடந்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தேர்வில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளும் நடந்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.