திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம்மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் இந்த ஆண்டின் (2024-2025) முன்னுரிமை கடன் இலக்கு ரூ.16,886.18 கோடிகடந்த செப்டம்பர் மாத அரையாண்டு இறுதியில் ரூ.9655.17கோடி முன்னுரிமை கடன் வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளது. விவசாய கடன் அட்டை, சிறுதொழில் கடன்கள், வாழ்வாதாரகடன்கள் மற்றும் கல்வி கடன்கள் ஆகியவற்றை வங்கிகள்நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களையும் விரைவாக வழங்கி நமது மாவட்டத்திற்கான இலக்கீட்டினைஎய்திட மாவட்ட ஆட்சித் தலைவரால் வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், இணை இயக்குநர் வேளாண்மை (பொ) கிருஷ்ணகுமார், இணை இயக்குநர் கூட்டுறவு முருகேசன், பொது மேலாளர் மாவட்டதொழில் மையம், முருகன், மாவட்ட மேலாளர் தாட்கோ பாஸ்கரன், முன்னோடி வளர்ச்சி அலுவலர் ரிசர்வ் வங்கி ராதாகிருஷ்ணன், மாவட்ட வளர்ச்சி மேலாளர் நபார்டு சசிகுமார், பொது மேலாளர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் வானதி, மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் பாஸ்கரன், அனைத்து வங்கிகளின் மாவட்டஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.